நாளை விற்பனைக்கு வரும் புதிய AI Nova 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய போன் நாளை முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் நாளை மதியம் 12 மணி இந்த போனை வாங்க முடியும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி அம்சங்கள்: 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) உடன் ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
நெக்ஸ்ட்கியூ ஓஎஸ் (nxtQ OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது . ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50 எம்பி மெயின் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமாவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதுவும் இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி உடன் இந்த போன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.18,999-ஆக உள்ளது. மேலும் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் விற்பனைக்கு வர உள்ளது இந்த புதிய போன். ஆகவே ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி போனை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








