Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ஆபர் விலையில் மீண்டும் விற்பனை.. 5ஜி, 6,000mAh பேட்டரி, IP68.. எந்த மாடல்கள்?

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி (Ai Plus Nova 2 5G) மற்றும் ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி (Ai Plus Nova 2 Ultra 5G) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே மே 1 ஆம் தேதி, பிளிப்கார்ட் வழியாக மீண்டும் விற்பனைக்கு வருகின்றன.

நினைவூட்டும் வண்ணம் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வந்தன. இப்போது மறுபடியும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே அதே பிளிப்கார்ட் வழியாக, மே 1 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளன. ஆக முன்னதாக மிஸ் செய்தவர்கள் இந்த முறை முந்திக்கொள்ளவும்.

செம்ம டிமாண்ட்.. ஆபர் விலையில் மீண்டும் விற்பனை.. 5ஜி, 6,000mAh!

ஏஐ பிளஸ் நோவா 2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் வேரியண்ட்டின் அசல் விலை ரூ.10,999 ஆகும். ஆனால் ரூ.550 பேங்க் டிஸ்கவுண்ட்டின் கீழ் இதை ரூ.10,449 க்கு வாங்கலாம்.

இதேபோல 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் அசல் விலை ரூ.12,999 ஆகும். ஆனால் ரூ.650 பேங்க் டிஸ்கவுண்ட்டின் கீழ் இதை ரூ.12,349 க்கு வாங்கலாம். இது கருப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா ஆகிய 5 கலர்களில் வாங்க கிடைக்கும்.

மறுகையில் உள்ள ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட்டின் அசல் விலை ரூ.18,999 ஆகும். அதே சமயம், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.20,999 ஆகும். இருப்பினும் முறையே ரூ.950 மற்றும் ரூ.1050 பேங்க் டிஸ்கவுண்ட்டிற்கு பின்னர் சற்றே குறைக்கப்பட்ட விலையில் வாங்க கிடைக்கும். இது கருப்பு, நீலம், பச்சை, ஊதா மற்றும் சிவப்பு ஆகிய கலர்களில் விற்பனைக்கு வரும்.

ஏஐ பிளஸ் நோவா 2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி மற்றும் ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஆகிய இரண்டுமே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான நெக்ஸ்ட்க்யூ ஓஎஸ் (NxtQ OS) உடன் இயங்கும் டூயல் சிம் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,500 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸை வழங்குகிறது. அதே சமயம், ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.745-இன்ச் HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது, இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது.

அல்ட்ரா மாடல் ஆனது 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7400 சிப்செட், 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது. மறுபுறம் உள்ள ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி மாடல் ஆனது 6என்எம் செயல்முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா கோர் யூனிசாக் டி8200 சிப்செட்டை கொண்டுள்ளது. இதில் மாலி-G57 MP2 GPU, 6GB வரை ரேம் மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

கேமராக்களைப் பொறுத்தவரை, ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் சோனி IMX752 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், அதனுடன் இணைக்கப்பட்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது

மறுபுறம், ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6,000mAh பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன. அல்ட்ரா மாடல் ஆனது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் அதே வேளையில், ஸ்டாண்டர்ட் மாடல் 18W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இந்த அல்ட்ரா மாடல் தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் IP68 ரேட்டிங்கையும், ஸ்டாண்டர்ட் மாடல் IP64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Ai Plus Nova 2 Ultra 5G Ai Plus Nova 2 5G Coming to sale Again in Flipkart on May 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X