Home
Mobile

மிரட்டி விட்டாப்ல.. ரூ.14,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. SONY கேமரா.. 8GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி (Ai+ Nova 2 Ultra 5G) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏஐ+ நோவா சீரிஸ் மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகி விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது, நோவா 2 சீரிஸ் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஏஐ+ நோவா 2 5ஜி மற்றும் ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. சிப்செட், பேட்டரி, டிஸ்பிளே மற்றும் கேமரா பீச்சர்களில் நோவா 2 அல்ட்ரா 5ஜி பட்ஜெட்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

மிரட்டி விட்டாப்ல.. ரூ.14,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. SONY கேமரா!

ஏனென்றால், முந்தைய மாடல்கள் யுனிசோக் சிப்செட் கொண்டு வெளியாகின. ஆனால், இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் சிப்செட் கிடைத்துள்ளது. அதேபோல மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 144 Hz டிஸ்பிளே, IP68 ரேட்டிங் போன்ற முக்கிய பீச்சர்களில் இந்த பட்ஜெட்டுக்கு எந்த குறையும் இல்லாமலேயே இருக்கிறது.

ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Ai+ Nova 2 Ultra 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட்டை இந்த ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

நெக்ஸ்ட்கியூ ஓஎஸ் (nxtQ OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்து உள்ளது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 200 கிராம் எடை கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் இந்த ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ப்ளூ (Blue), கிரீன் (Green), பர்பிள் (Purple), பிளாக் (Black) மற்றும் ரெட் (Red) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. ஏஐ+ நோவா 2 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.8,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதிலும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆனால், 18W சார்ஜிங் மட்டுமே கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ai+ Nova 2 Ultra 5G With 6000mAh Battery 33W Charging Launched in India Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X