செப்டம்பர் 19-ல் சம்பவம் இருக்கு.. கம்மி பட்ஜெட்ல சோனி கேமரா.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
ஏஐ பிளஸ் நோவா 2 பவர் (Ai Plus Nova 2 Power) ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 19-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன.
ஏஐ பிளஸ் நோவா 2 பவர் அம்சங்கள் (Ai Plus Nova 2 Power Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் (MediaTek Dimensity 7100 chipset) உடன் புதிய ஏஐ பிளஸ் நோவா 2 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் மாடல் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 பவர் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
6.75-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
48எம்பி ஏஎப் சோனி ஐஎம்எக்ஸ்582 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இடம்பெறும் . இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது, ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
