Home
Mobile

ஜூன் 26 முதல் எல்லோர் கையிலும் இந்த 5G போன் தான்.. ரெண்டும் வாங்கலாமே.. ரூ.12999 ஒன்னு.. ரூ.15,999 ஒன்னு!

ஏஐ பிளஸ் (Ai Plus) நிறுவனமானது அதன் நோவா சீரீஸின் (Nova Series) கீழ் 2 புதிய 5ஜி ஸ்மாட்போன்களை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அவைகள் ஏஐ பிளஸ் நோவா 2 நியோ 5ஜி (Ai Plus Nova 2 Neo 5G) மற்றும் ஏஐ பிளஸ் நோவா 2 ப்ரோ 5ஜி (Ai Plus Nova 2 Pro 5G) மாடல்கள் ஆகும்.

ஏஐ பிளஸ் நோவா 2 நியோ 5ஜி மற்றும் ஏஐ பிளஸ் நோவா 2 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே மீடியாடெக் (MediaTek) சிப்செட்டுகள் மற்றும் சக்திவாய்ந்த 6000mAh பேட்டரி உடன் வருகின்றன. என்ன விலை? எப்போது முதல் விற்பனை? என்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

ஜூன் 26 முதல் எல்லோர் கையிலும் இந்த 5G போன் தான்.. ரெண்டும் வாங்கலாமே!

ஏஐ பிளஸ் நோவா 2 நியோ 5ஜி விலை, விற்பனை, ஆபர், அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆகிய ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.12,999 மற்றும் ரூ.13,999 ஆகும். இது ஜூன் 26 அன்று மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும்.

மீடியாடெக் டிமென்சிட்டி 6300 5ஜி (MediaTek Dimensity 6300 5G) சிப்செட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 6.74-இன்ச் HD+ 120Hz LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பேக் பேனலில் 48MP Sony IMX582 AI கேமரா மற்றும் முன்புறத்தில் 8MP செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது 18W சார்ஜிங் வசதியுடன் கூடிய 6000mAh பேட்டரியை கொண்டுள்ளதுடன், 2TB வரை ஸ்டோரேஜை (storage) அதிகரிக்கும் வசதியையும் வழங்குகிறது.

மேலும், இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், IP65 தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் மற்றும் 8.5 மிமீ ஸ்லிம் டிசைன் ஆகியவைகளும் உள்ளன. நோவா 2 நியோ 5ஜி ஸ்மார்ட்போன்ஆனது Android 16-ஐ அடிப்படையாகக் கொண்ட NxtQuantum OS-இல் இயங்குகிறது. இதில் NxtPrivacy Dashboard மற்றும் AI Key வசதிகளும் இடம்பெற்றுள்ளன. கனெக்டிவிட்டி வசதிகளை பொறுத்தவரை, இதில் Dual-SIM 5G, Wi-Fi 5, Bluetooth, GPS மற்றும் USB-C போர்ட் ஆகியவை உள்ளன.

ஏஐ பிளஸ் நோவா 2 ப்ரோ 5ஜி விலை, விற்பனை, ஆபர், அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆகிய ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.17,999 ஆகும்.

இது ஜூன் 26 அன்று மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும். தேர்ந்தெடுத்த வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1,000 வங்கித் தள்ளுபடியையும் பெறலாம். இது ஜூன் 26 அன்று மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மீடியாடெக் டிமென்சிட்டி 7100 (MediaTek Dimensity 7100) சிப்செட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 800 நிட்ஸ் (nits) வரையிலான HBM ப்ரைட்னஸ் மற்றும் பல அடுக்கு குளிரூட்டும் அமைப்புடன் கூடிய 6.9-இன்ச் FHD+ 144Hz பஞ்ச்-ஹோல் (punch-hole) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் ரியர் கேமரா அமைப்பில் 48MP Sony IMX582 முபிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளன; முன்பக்கத்தில் 13MP செல்பீ கேமரா உள்ளது

போன் கால்கள், மெசேஜ்கள் மற்றும் நோட்டிபிக்கேஷன்களுக்கான கஸ்டமைஸ் செய்யக்கூடிய லைட்களும் இதில் உள்ளன. பிரீமியம் 2.5D கிளாஸ் பினிஷ், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோஃபோன்கள், UFS ஸ்டோரேஜ் வசதி, 1TB வரை விரிவாக்கக்கூடிய மெமரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6000mAh பேட்டரி ஆகியவற்றையும் நோவா 2 ப்ரோ 5ஜி கொண்டுள்ளது. மேலும் ஏஐ பிளஸ் 2 நியோ 5ஜி ஸ்மார்ட்போனை போலவே, இதுவும் NxtPrivacy டேஷ்போர்டு மற்றும் மேம்பட்ட AI Key தனிப்பயனாக்க வசதியுடன் கூடிய, Android 16-ஐ அடிப்படையாகக் கொண்ட NxtQuantum OS-இல் இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
Ai Plus Nova 2 Neo 5G for 12999 Ai Plus Nova 2 Pro 5G For 15999 Launched in India Sale Starts June 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X