Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ரூ.13,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி (Ai+ Nova 2 5G) ஸ்மார்ட்போன் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ஏஐ பிளஸ் நோவா 2 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஏஐ பிளஸ் நோவா 2 மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ரூ.13,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி

ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி அம்சங்கள் (Ai Plus Nova 2 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் யுனிசாக் டி8200 சிப்செட் உடன் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் 6.74 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

அதுவும் nxtQ OS சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ரூ.13,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி

3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), எப்எம் ரேடியோ (FM Radio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)வசதியுடன் ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி போன் வெளியாகி உள்ளது.

மேலும் 6000எம்ஏஎச் பேட்டரி உடன் ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி போன் வெளியாகி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், குளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Ai Plus Nova 2 5G with 4GB RAM available at 20 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X