அடேங்கப்பா.. ரூ.8,999 போதும்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. விற்பனைக்கு வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?
ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி (Ai+ Nova 2 5G) ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் வாங்க முடியும். இப்போது ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி அம்சங்கள் (Ai Plus Nova 2 5G specifications): 6.74 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது,
nxtQ OS சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), எப்எம் ரேடியோ (FM Radio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)வசதியுடன் ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி போன் வெளியாகி உள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி போன் வெளியாகி உள்ளது, மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், குளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பிளாக் (Black), ப்ளூ (Blue), கிரீன் (Green), பிங்க் (Pink) மற்றும் பர்பிள் (Purple) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








