ஏப்.9 க்கு அப்புறம் இதுதான்.. மட்ட ரேட்ல 5G போன்.. 50MP கேமரா.. 13MP செல்பீ.. புது Ai+ போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் மட்ட ரேட்டில் வெளியாக இருக்கும் ஏஐ+ நோவா 2 5ஜி (Ai+ Nova 2 5G) மற்றும் ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி (Ai+ Nova 2 Ultra 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. ஐபோன் லுக் கொடுக்கும் இந்த ஏஐ+ நோவா 2 5ஜி சீரிஸ் மாடல்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதில் ஏஐ+ நிறுவனமானது, பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது, ஏஐ+ நோவா 2 5ஜி மற்றும் ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி இந்த மாடல்கள் வெளியாக இருக்கின்றன.

பிளிப்கார்ட் தளத்தில் முக்கிய பீச்சர்கள், டிசைன் மற்றும் கலர் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. ஐபோனின் லுக் கொடுக்கும்படி டிசைன் இருக்கிறது. இந்த மாடல்களும் ரூ.10,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளின் ஸ்மார்ட்போன் பார்ட்னராக ஏஐ+ இருக்கிறது.
ஏஐ+ நோவா 5ஜி அம்சங்கள் (Ai+ Nova 2 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த ஏஐ+ நோவா 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. பர்பிள் (Purple), பிங்க் (Pink), கிரீன் (Green), லைட் ப்ளூ (Light Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.
இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளன. இது பட்ஜெட் விலை மாடலாக இருக்கும். ஆனால், ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் கேமிங் பிரியர்களுக்கு பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. ஐபோனை போல டிசைனை கொடுத்து உள்ளது. கஸ்டமைசபிள் கேமிங் ஆக்சன் பட்டன்கள் (Customisable Gaming Buttons) கொடுக்கப்படுகின்றன.
ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Ai+ Nova 2 Ultra 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனிலும் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக 13 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்து உள்ளது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்ட மாடலாக இருக்கிறது. 5 கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
பர்பிள் (Purple), லைட் ப்ளூ (Light Blue), ரெட்/பர்கன்டி (Red/Burgundy), கிரீன் (Green) மற்றும் டார்க் கிரே/பிளாக் (Dark Grey/Black) கலரில் கிடைக்க உள்ளது. பேக் பேனலில் சர்குளர் எல்இடி லைட்னிங் கிடைக்கிறது. இதில் கஸ்டமைசபிள் ஸ்மார்ட் அலெர்ட் (Customisable Smart Alerts) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே பிளிப்கார்ட் தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சிப்செட், டிஸ்பிளே மற்றும் பேட்டரி உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் வரும் நாட்களில் உறுதி செய்யப்பட உள்ளன. ரூ.10,000 பட்ஜெட்டில் இந்த மாடல்களை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், முந்தைய மாடல்கள் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளன, ஆகவே, இந்த ஏஐ+ நோவா 2 5ஜி, ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி மாடல்களையும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








