Home
Mobile

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.8,999 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் ஏஐ+ நோவா 2 5ஜி (Ai+ Nova 2 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 50 எம்பி மெயின் கேமரா, 120Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் பட்டையை கிளப்புகிறது. இந்த ஏஐ+ நோவா 2 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் நிறுவனங்களில் ஏஐ+ நிறுவனமானது, லேட்டஸ்ட்டாக சேர்ந்துள்ளது. இன்று (ஏப்ரல் 9), ஒரே நாளில் ஏஐ+ நோவா 2 5ஜி, ஏஐ+ நோவா 2 அல்ட்ரா 5ஜி (Ai+ Nova 2 Ultra 5G) மற்றும் ஏஐ+ நோவா ஃபிளிப் 5ஜி (AI+ Nova Flip 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கி இருக்கிறது. இதில் மலிவு விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை நோவா 2 5ஜி மாடல் தட்டி தூக்கிவிட்டது.

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.8,999 போதும்.. 6000mAh பேட்டரி.. மாடல்?

ஏனென்றால், ரூ.9000 பட்ஜெட்டுக்குள் 6000mAh பேட்டரி, 50 எம்பி கேமராவுடன் அமோலெட் டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. இந்த பட்ஜெட்டில் 120Hz டிஸ்பிளே கிடைத்து இருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், முழு பீச்சர்களையும் பார்க்க வேண்டி இருக்கிறது. பிறகு விலை மற்றும் விற்பனை விவரங்களுக்கு செல்லலாம்.

ஏஐ+ நோவா 2 5ஜி அம்சங்கள் (Ai+ Nova 2 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் நெக்ஸ்ட்கியூ ஓஎஸ் (NxtQ OS) கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு வழக்கமாக கிடைக்கும் ஆக்டா கோர் யுனிசோக் டி8200 6என்எம் (Octa Core Unisoc T8200 6nm) சிப்செட்டை கொடுத்து உள்ளது. அதேபோல மாலி ஜி57 எம்பி2 ஜிபியு (Mali G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் இந்த ஏஐ+ நோவா 2 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி மற்றும் 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கொண்டுள்ளது. 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. டைப்-சி சார்ஜிங் வழக்கம்போல கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் செல்பீ, வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), லோவ் லைட் மோட் (Low Light Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்களை கொண்டுள்ளது. 6.78 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இதில் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், பஞ்ச்-ஹோல் டிசைனில் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), ப்ளூடூத் 5 கிடைக்கிறது.

ஏஐ+ நோவா 2 5ஜி விலை (Ai+ Nova 2 5G Price): 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது. ஏப்ரல் 14ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue), கிரீன் (Green), பிங்க் (Pink) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ai+ Nova 2 5G With 50MP Camera Launched in India Sale From April 14 on Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X