இப்போதே இந்தியாவில் ஐபோன் 5வை விற்கும் இபே

Posted By: Karthikeyan
 இப்போதே இந்தியாவில் ஐபோன் 5வை விற்கும் இபே

ஐபோன் 5வின் விற்பனை தொடங்கியதிலிருந்து அந்த போன் விற்பனையில் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்த நிலையில் இந்த போன் இந்திய சந்தைக்கு வரவேண்டும் என்றால் அதற்கு இந்திய ரசிகர்கள் இன்னும் இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த ஐபோனை இந்தியாவிலிருந்து வாங்க விரும்பினால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இபே என்று அழைக்கப்படும் இ-காமர்ஸ் இணைய தளம் இந்த ஐபோனை ரூ.74,000லிருந்து ரூ.88,000 வரை விற்பனை செய்திருக்கிறது. இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதவர்கள் மேற்சொன்ன அதிக விலை கொடுத்து இந்த ஐபோன் 5வை வாங்கலாம்.

மேலும் மொத்த பணத்தை முன்பே செலுத்தி விடவேண்டும். பின் ஐபோன் 5 கைகளுக்கு வரும். கடந்த வெள்ளி கிழமை முதல் ஐபோன் 5, அமெரிக்கா உட்பட 9 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக விற்பனையாகி வருகிறது. ஆனால் இந்த 9 நாடுகளில் இந்தியா இல்லை.

இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த இபே நிறுவனம் பணம் செலுத்திய ஒரே நாளில் ஐபோனை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. மேலும் ஐசிஐசிஐ அல்லது சிட்டி போன்ற வங்கிகளில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் எச்டிசி வங்கி கிரடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த போனை வாங்கி இன்ஸ்டால்மென்ட் முறையி்ல் பணம் செலுத்தலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot