ரூ.25000 விலை குறைப்பு.. Samsung Galaxy S26 சீரீஸ் அறிமுகத்தால் Galaxy S25 சீரீஸ் விலை சரிவு!
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Galaxy S26 Series) மாடல்களின் வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டது என்பதும், அவைகள் வருகிற பிப்ரவரி 25, 2026 அன்று நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பதும் ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான்.
புதிய தகவல் என்னவென்றால் - புதிய கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி வெளியான வேகத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் உள்ள 2 மாடல்களின் விலைகள் கடுமையாக குறைந்துள்ளன. அவைகள் சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S25 Plus) மாடல்கள் ஆகும்.

பிளிப்கார்ட்டில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.80,999 ஆகும். அதாவது ரூ.6000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது.
சுவாரசியமாக, பிளிப்கார்ட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனும் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.99,999 ஆகும். அதாவது ரூ.25,000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது.
வரவிருக்கும் கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? எக்ஸ் தளம் வழியாக, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் கேஜெட்ஸ் டேட்டா (Gadgetsdata) வழியாக கிடைத்த தகவலின்படி - கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய 6.3-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.
மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு உடனான பெரிய 6.7-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 2கே ரெசல்யூஷன் உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் பெறலாம். மேலும் இந்த இரண்டு மாடல்களும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை தக்கவைத்து கொள்ளலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது எக்ஸினோஸ் 2600 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஆல் இயக்கப்படும் என்று டிப்ஸ்டர் நம்புகிறார். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் ஆனது ஸ்னாப்டிராகன் மாறுபாட்டை அமெரிக்கா மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிடுகிறது, அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகள் எக்ஸினோஸ் வெர்ஷனை வெளியிடுகிறது
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டுமே 50எம்பி (மெயின்) + 12எம்பி (அல்ட்ரா வைட்) + 50எம்பி (டெலிஃபோட்டோ) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை 4300mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்; கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பெரிய 4,900mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications