Home
Mobile

அதே டெய்லர்.. அதே வாடகை.. ஆனா நல்லா இருக்கு.. 2025 நியூ இயர்காக ரிஸ்க் எடுக்க விரும்பாத Infinix நிறுவனம்!

2024 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2025 புத்தாண்டிற்காக புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பாத, இன்பினிக்ஸ் நிறுவனமானது, அதன் இன்பினிக்ஸ் ஹாட் 50 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய மாற்றம் ஒன்றை செய்து பட்டையை கிளப்பியுள்ளது. அதென்ன மாற்றம்? என்னென்ன மாடல்கள்? இதோ விவரங்கள்:

இந்தாண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் இன்பினிக்ஸ் ஹாட் 50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த செப்டம்பரில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. இதற்கிடையில், அக்டோபரில் சில ஆப்பிரிக்க சந்தைகளில் இன்பினிக்ஸ் ஹாட் 50ஐ (Infinix Hot 50i) மாடல் வெளியானது.

2025 நியூ இயர்காக ரிஸ்க் எடுக்க விரும்பாத Infinix நிறுவனம்!

நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இன்பினிக்ஸ் ஹட் 50 ப்ரோ (Infinix Hot 50 Pro) மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 50 ப்ரோ பிளஸ் (Infinix Hot 50 Pro Plus) ஆகிய மாடல்களையும் அறிமுகப்படுத்தி இருந்தது. இதற்கிடையில் "நியூ இயர் நியூ ஹாட்" என்று கூறி ​​இன்ஃபினிக்ஸ் ஹாட் 50 சீரிஸின் கீழுள்ள ஸ்மார்ட்போன்களின் புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், ஹாட் 50 சீரிஸில் பிரமிக்க வைக்கும் புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்துகிறோம்: ப்ளாசம் பிங்க், ரைசிங் ரெட், அரோரா கிரீன் மற்றும் ட்ரீமி பர்பில். இது 2025 ஆம் ஆண்டை தொடங்குவதற்கான சரியான வழியாக இருக்கும். உங்களுக்கான கலரை தேர்ந்தெடுத்து, ஸ்டைலுடனும் அதிர்ஷ்டத்துடனும் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கவும் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஹாட் 50 சீரீஸின் டாப்-ஆஃப்-தி-லைன் மாடல் ஆன இன்ஃபினிக்ஸ் ஹாட் 50 ப்ரோ பிளஸ் ஆனது நானோஃப்ளெக்ஸ் ஃபைபர் லெதர் ஃபினிஷுடன் வருகிறது மற்றும் இது அரோரா கிரீன், ப்ளாசம் பிங்க் மற்றும் ரைசிங் ரெட் ஷேட்களில் கிடைக்கும் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 50ஐ மாடல் ஆனது புதிய ட்ரீமி பர்பில் கலரில் வாங்க கிடைக்கும்.

இதற்கிடையில், இன்ஃபினிக்ஸ் ஹாட் 50 ப்ரோ மற்றும் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஹாட் 50 மடல்கள் ஆண்டு ப்ளாசம் பிங்க் மற்றும் ட்ரீமி பர்பில் கலர்களில் டூயல்ஸ்கேப் கிளாஸ் பேனல்களுடன் கிடைக்கும் என்றும், இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனின் நானோஃப்ளெக்ஸ் ஃபைபர் லெதர் ஃபினிஷ் ஆனது ட்ரீமி பர்பிள் நிறத்தில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது டைமன்சிட்டி 6300 (Dimensity 6300) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 சென்சார் + டெப்த் சென்சார் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.
சைட் மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி54 ரேட்டிங்கும் உள்ளது. இது டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட்டை வழங்கும்.

இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, ப்ளூடூத் 5.3 ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் வருகிறது. தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ahead 2025 New Year Infinix Introduced New New Colours of Hot 50 5G Hot 50 Pro Hot 50 Pro Plus
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X