6000எம்ஏஎச் பேட்டரி, வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ஏஜிஎம் எக்ஸ் 2 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎம் தற்சமயம் அட்டகாசமான ஏஜிஎம் எக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது, அதன்படி வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் தண்ணீர் மற்றும் தரையில் விழுந்தாலோ எவ்வித பாதிப்பும் ஏற்படாத வீதம் அதிக பாதுகாப்பு வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் தனிசிறப்பு என்னவென்றால், தண்ணீரில் போட்டால் கூட மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம்
அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 653:
ஏஜிஎம் எக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஏஜிஎம் எக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
6000எம்ஏஎச்:
ஏஜிஎம் எக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications