ரூ.10000 மிச்சப்படுத்தலாம்.. அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. விலை கம்மியா 2 புது Vivo போன்கள்!
விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி60 (Vivo V60) மாடலின் லைட் வெர்ஷன் ஆனது, அதாவது விவோ வி60 லைட் (Vivo V60 Lite) ஸ்மார்ட்போன் ஆனது, விரைவில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) வேரியண்ட்களில்!
ஆக எப்படி பார்த்தாலும் விவோ வி60 லைட் ஸ்மார்ட்போன் ஆனது விவோ வி60 மாடலை விட ரூ.7,000 - ரூ.10,000 வரை மலிவானதாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் விவோ வி60 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.36,999 க்கும், ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.45,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ வி60 லைட் ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது 5ஜி வேரியண்ட்டின் விலையாகும். 4ஜி வேரியண்ட்டின் விலை இன்னும் குறைவாகவே இருக்கும்.
ஆக விவோ வி60 ஸ்மார்ட்போனின் கேமரா திறன்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் விவோ வி60 லைட் அறிமுகத்திற்கு காத்திருக்கலாம்; காத்திருந்தால் ரூ.10,000 வரை மிச்சப்படுத்தலாம். கீக்பெஞ்ச் வழியாக கிடைத்த தகவல்களின்படி விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது அட்ரினோ 610 ஜிபிபு உடனான குவால்காம் சிப்பை கொண்டிருக்கும்.
இன்னும் குறிப்பிட்டு சொன்னால் - இது ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஆகியவற்றையும் கொண்டிருக்கலாம். பேட்டரி விவரங்கள் எதுவும் இல்லை; ஆனால் இது 90W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம் என்பதை கீக்பெஞ்ச் வெளிப்படுத்தியுள்ளது.
மறுகையில் உள்ள விவோ வ60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். அது டைமன்சிட்டி 7300 சிப்செட் ஆக இருக்கலாம். இதுவும் 8ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் அறிமுகம் செய்யப்படலம். இதுதவிர்த்து விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை பெரிய எந்த விவரங்களையும் கீக்பெஞ்ச் பட்டியல் வெளிப்படுத்தவில்லை.
விவோ வி60 ஸ்மார்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 SoC)
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி 68 மற்றும் ஐபி 69 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 6500mAh பேட்டரி
விவோ வி60 ஸ்மார்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் விவோ வி60 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.36,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்களின் விலை முறையே ரூ.38,999 மற்றும் ரூ.40.999 ஆகும்.
கடைசியாக உள்ள ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்பிசியஸ் கோல்ட், மிஸ்ட் கிரே மற்றும் மூன்லைட் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் விவோ இந்தியா இ-ஸ்டோர், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக ஏற்கனவே இந்தியாவில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








