Home
Mobile

Redmi ருத்ர தாண்டவம்.. 7-இன்ச் டிஸ்ப்ளே, 10000mAh பேட்டரி, 100W சார்ஜிங் உடன் புது போன்.. எந்த மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி நோட் 17 (Redmi Note 17) மாடல் ஆனது ஜிஎஸ்எம்ஏ ஐஎம்இஐ (GSMA IMEI) தரவுத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது - இந்நிறுவனம் தனது அடுத்த நோட்-சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே பணியாற்றி வருவதை உறுதி செய்கிறது, மேலும் இது வழக்கத்தை விட விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் சுட்டி காட்டுகிறது.

ஆக இதே சீரிஸின் கீழ் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் தொடர்பான முந்தைய கசிவு, இந்த சாதனம் ஒரு பெரிய 7-இன்ச் டிஸ்ப்ளே, கிட்டத்தட்ட 10,000mAh திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரி, 100W வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, மற்றும் சில வேரியண்ட்டுகளில் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.

Redmi ருத்ர தாண்டவம்.. 7-இன்ச் டிஸ்ப்ளே, 10000mAh பேட்டரி!

ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்? தற்போதைக்கு, ஹார்ட் வேர் குறித்த விவரங்கள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், பேஸிக் நோட் 17 இந்த சீரீஸில் மலிவு விலை மாடலாக இருக்கும், மேலும் இது ஒரு உயர்நிலை 5ஜி மாடலாக இல்லாமல், 4ஜி அடிப்படையிலான ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம்.

ஜிஎஸ்எம்ஏ பதிவில், 26012RN62L, 26012RN62Y, மற்றும் 26012RN62A ஆகிய மாடல் குறியீடுகளை கொண்ட நோட் 17 ஸ்மார்ட்போனின் மூன்று வகைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது, இந்த ஸ்மார்ட்போன் உலகளாவிய மற்றும் லத்தீன் அமெரிக்க சந்தைகளுக்காக உருவாக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும், சீனா அல்லது இந்தியாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பதிப்புகள் எதுவும் தற்போது இல்லை. ஏனென்றால் இவை இரண்டும் ரெட்மி நோட் சீரீஸின் முக்கிய சந்தைகளாகும்.

ஏன் ரெட்மி நோட் 15 க்கு அடுத்தபடியாக ரெட்மி நோட் 16 அறிமுகம் ஆகவில்லை? ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்கள் பொதுவாக ஆண்டு சுழற்சியின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும், ஆனால் இந்த முன்கூட்டிய பதிவு, ரெட்மி நோட் 17 சீரிஸ் முந்தைய தலைமுறைகளை விட முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை காட்டுகிறது.

மேலும், ஷாவ்மீ தனது தயாரிப்பு வரிசைகள் முழுவதும் பெயரிடும் உத்தியை மாற்றக்கூடும் என்றும் பேசப்படுகிறது. கிடைக்கபெற்ற அறிக்கைகளின் படி, இந்நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் குடும்பங்களில் எண்களை சீரமைக்க முயற்சிக்கக்கூடும், இது "நோட் 16" என்பதற்கு பதிலாக ரெட்மி நோட் 17 என்ற பிராண்டிங்கை கொண்டு வர வழிவகுக்கும்.

ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் எப்சிசி தரவுத்தளத்தில் 4G இணைப்பு, புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை ஆகியவற்றுக்கான ஆதரவுடனும், 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வரையிலான பல மெமரி வேரியண்ட்டுகள் காணப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக 5ஜி சப்போர்ட் தேவை இல்லாத வாடிக்கையாளர்கள் 4ஜி மாடலை, ஒப்பீட்டளவில் மலிவான விலைக்கு வாங்க முடியும்.

சியோமி, ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் இருப்பது போலவே அதே பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்பிளே போன்ற அம்சங்கள் மீதான கவனத்தை தொடருமா அல்லது மலிவு விலையில் 5ஜி ஆதரவு என்கிற போக்கின் மீது அதிக கவனம் செலுத்துமா என்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதே ரூ.15,000 - ரூ.18,000 விலை வரம்பில் நீடித்தால், இது கடுமையான போட்டியை கொடுக்கும் மற்றும் எதிர்கொள்ளும்.

ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுகம் எப்போது? டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லான்ச் டைம்லைன், மற்றொரு டிப்ஸ்டர் ஆன சஞ்சு வழியாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 10 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று கணித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
After Redmi Note 17 Pro Max Specs Leak Redmi Note 17 surfaced in GSMA IMEI database What it means
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X