Poco X3 ஸ்மார்ட்போனிற்கு நிரந்தர விலை குறைப்பு.. இனி விலை இது தான்..
இன்று இந்தியாவில் போகோ எக்ஸ் 3 புரோ அறிமுகப்படுத்தப்பட்டவுடன், Poco நிறுவனம் இப்போது இந்தியாவில் போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் விலையை நிரந்தரமாகக் குறைத்துள்ளது. இந்த புதிய அதிகாரப்பூர்வ தகவலின் படி, வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.14,999 என்ற விலைக்கு வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஒரு நிரந்தரமான விலை குறைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

போகோ எக்ஸ் 3 மீது விலை குறைப்பு
தெரியாதவர்களுக்கு நினைவுகூர, போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் அதன் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 16,999 என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இப்போது, இந்த போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.14,999 என்று குறைந்து, ரூ.2,000 நிரந்தர விலை குறைப்பைப் பெற்றுள்ளது. மற்ற வேரியண்ட் மாடல்களின் வகைகளுக்கான விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ரூ .2,000 வரை விலை குறைப்பா?
ஆனால் போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு மாடலின் மீதும் ரூ .2,000 வரை இதே போன்ற தள்ளுபடிகள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதாவது 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை இப்போது ரூ .15,999 ஆகவும், டாப் வேரியண்ட் மாடலான 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.17,999 ஆகவும் விலை குறைக்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ எக்ஸ் 3 சிறப்பம்சம்
இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் கொண்ட 1080 × 2400 பிக்சல்கள் உடைய டிஸ்ப்ளேவுடன், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா 5 பாதுகாப்புடன் வருகிறது. இது 240Hz தொடு மாதிரி விகிதத்துடன் 120Hz புதுப்பிப்பு வீதக் காட்சியைக் கொண்டுள்ளது. அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

போக்கோ எக்ஸ் 3 கேமரா
போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 682 சென்சார், 13 மெகாபிக்சல் 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் 4cm மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் சென்சார் கொண்ட பஞ்ச் ஹோல் கட்அவுட் செல்பி கேமரா வைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி
போக்கோ எக்ஸ் 3 பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. மற்ற அம்சங்களை பொறுத்த வரையில் இது 3.5 மிமீ ஆடியோ ஜாக், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றுடன் வருகிறது.
போகோ எக்ஸ் 3 ப்ரோ பற்றி கூடுதல் விபரம் அறிந்துகொள்ள மேலே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications