ஒரே போடு.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் உடன் புது OPPO 5ஜி போன்!
ஒப்போ (Oppo) நிறுவனம் ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று அதன் ஒப்போ கே13 5ஜி (Oppo K13 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கிடையில் ஒப்போ கே12எஸ் 5ஜி (Oppo K12s 5G) ஸ்மார்ட்போனை ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது
இது இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று ஒப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒப்போ கே12எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது ப்ரிஸம் பிளாக் (Prism Black), ரோஸ் பர்பிள் (Rose Purple) மற்றும் ஸ்டார் ஒயிட் (Star White) ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யபப்டும் என்று ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8GB + 128GB, 8GB + 256GB, 12GB + 256GB, மற்றும் 12GB + 512GB ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும்
ஒப்போ கே12எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெர்டிகல் பில் ஷேப்டு (Vertical Pill Shaped) ஸ்லாட்டில் இரண்டு கேமரா சென்சார்கள் வைக்கப்பட்டுள்ள வட்டமான விளிம்புகளுடன் கூடிய ஸ்கொயர் ரியர் செட்டப்பை (Square Rear Camera Setup) கொண்டுள்ளது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வலது விளிம்பில் காணப்படுகின்றன. இது குறுகிய பக்கவாட்டு பெஸல்களையும், சற்று தடிமனான 'சின்' (Chin) பகுதியையும் கொண்டுள்ளது. செல்பீ கேமராவை வைக்க டிஸ்பிளேவின் மேலே ஒரு மையப்படுத்தப்பட்ட ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டை கொண்ட ஒரு பிளாட் டிஸ்பிளேவை (Flat Display) கொண்டுள்ளது.
ஒப்போ கே12எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்
- 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் ஸ்கின்
- 5,700 மிமீ² வேப்பர் சேம்பர் (விசி) கூலிங் சிஸ்டம் (5,700mm² vapour chamber cooling system)
- என்எஃப்சி ஆதரவு (NFC Support)
- ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster)
- டூயல் ஸ்பீக்கர்ஸ்
முன்னதாக அறிமுகமான ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1000 nits peak brightnes), பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் (Panda Glass protection) உடனான 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 அனுப்பப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது 2எம்பி போர்ட்ரெய்ட் சென்சிங் யூனிட்டுடன் 32எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,100mAh செல்லை பேக் செய்கிறது.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் Uயூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஐபி54 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மற்றும் MIL STD 810H இராணுவ தர நீடித்து நிலைத்திருக்கும் பாலிகார்பனேட் பாடியை கொண்டுள்ளது.விலையை பொறுத்தவரை ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.ரூ.12,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும் அறிமுகமானது.


Click it and Unblock the Notifications








