Home
Mobile

அடேங்கப்பா.. இந்த புதிய நோக்கியா பீச்சர் போன் ரூ.20,000/- ஆ.?

நோக்கியா இ71 (2018) பற்றிய எந்தவிதமான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

நோக்கியா நிறுவனத்தின் கிளாசிக் 3310 பீச்சர் மொபைலை தொடர்ந்து, நவீன அம்சங்களுடன் நோக்கியா இ71 பீச்சர் தொலைபேசியும் அறிமுகம் செய்யப்படும் என்பதை மீண்டும் ஒரு லீக்ஸ் தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

நோக்கியா 3310 (2017) மொபைலை போலவே மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பில் இந்த கருவியை எச்எம்டி க்ளோபல் நிறுவனம் வெளியிடும் என்பதுபோல் தெரிகிறது. கூறப்படும் நோக்கியா இ71 (2018) ஆனது நிறுவனத்தின் முதல் 4ஜி பீச்சர் மொபைலாகவும் இருக்கலாமென்று கூறப்படுகிறது. அதாவது நோக்கியா 3310 (2018) சாதனத்திற்கு முன்னரே இக்கருவி வெளியாகலாமென்று அர்த்தம்.

புதிய அறிக்கை

புதிய அறிக்கை

சமீபத்தில், மாடல் எண் டிஏ-1047 என்கிற பெயரில் ஒரு நோக்கியா சாதனம் எப்சிசி மற்றும் ப்ளூடூத் எஸ்ஐஜி நிதளங்களில் காணப்பட்டது. இப்போது வெளியாகியுள்ள சீன செய்தி ஊடகத்தின் ஒரு புதிய அறிக்கையானது, வரவிருக்கும் நோக்கியா இ71 (2018) தொலைபேசியின் சில விவரங்களை வெளியிட்டுள்ளது.

4ஜி பீச்சர் போன்

4ஜி பீச்சர் போன்

நோக்கியா 3310 (2018) மொபைலுக்கான பெரும் வரவேற்ப்பை தொடர்ந்து, நோக்கியா கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் கவனம் இப்போது நோக்கியா இ71 (2018) மேல் உள்ளது. இக்கருவி 4ஜி பீச்சர் போனாக வெளியாகலாமெனவும் கூறப்படுகிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

வெளியான சீனப் பதிப்பகத்தின் (மைடிரைவர்ஸ்) அறிக்கையின்படி,நோக்கியா இ71 (2018) ஆனது 480பிக்சல்கள் என்கிற தீர்மானம் கொண்ட 3.5 அங்குல தொடுதிரை டிஸ்பிளே கொண்டிருக்கும். மேலும் அதன் காட்சிக்கு கீழே, குவெர்ட்டி கீபேட் இடம்பெறும்.

1ஜிபி ரேம்

1ஜிபி ரேம்

மேலும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 205 சிப்செட் மூலம் இயங்கும், இது சாதனத்திற்கு 4ஜி எல்டிஇ ஆதரவை வழங்குகிறது. இந்த செயலி 1ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 8ஜிபி உள் சேமிப்பும் கொண்டுள்ளது. இந்த சேமிப்பு மைக்ரோ எஸ்டி கார்டுடன் மேலும் விரிவாக்கப்படலாம்.

3எம்பி கேமரா

3எம்பி கேமரா

நோக்கியா இ71 (2018) பீச்சர் போன் களமிறங்கும் சந்தையை பொறுத்து ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் வகைகளில் வெளிவருமென்று கூறப்படுகிறது. தொலைபேசியின் பின்புறத்தில் ஒரு 3எம்பி கேமரா இருக்கும். நோக்கியா இ71 (2018) பற்றிய எந்தவிதமான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை.

ஒரு

ஒரு "மோசமான" விலை

வெளியான அறிக்கை வரவிருக்கும் இந்த பீச்சர் தொலைபேசியின் விலை நிர்ணயத்தையும் வெளிப்படுத்தியது, ஆனால் அதுவொரு நம்பமுடியாத விலைப்புள்ளியாக உள்ளது. அதாவது சுமார் ரூ.20,000/- என்கிற விலையில் கூறப்படும் நோக்கியா இ71 வெளியாகலாம். இது ஒரு "மோசமான" விலையாகும்.

நோக்கியா 9, நோக்கியா 8 (2018)

நோக்கியா 9, நோக்கியா 8 (2018)

இந்த நோக்கியா இ71 (2018) ஆனது ஜனவரி 19-ஆம் தேதியன்று நோக்கியா 9, நோக்கியா 8 (2018) மற்றும் நோக்கியா 6 (2018) உடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக என்று கூறப்படுகிறது. நோக்கியா 9 நிறுவனத்தின் முதல் பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன் ஆக இருக்கும்.

நோக்கியா 6 (2018)

நோக்கியா 6 (2018)

மறுகையில் உள்ள நோக்கியா 6 (2018) ஒரு சக்தி வாய்ந்த இடைப்பட்ட சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்எம்டி குளோபல் நிறுவனம் மிகவும் வெற்றிகரமான முறையில் 2017 ஆம் ஆண்டை கடந்து விட்டது. அது 2018-லும் தொடருமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Best Mobiles in India

English summary
After Nokia 3310, HMD Global is Looking to Bring Back the Nokia E71 Feature Phone With 4G LTE Functionality. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X