Home
Mobile

Plus மாடல்களுக்கு வேட்டு வச்ச Apple.. இனிமேல் Slim மாடல்.. iPhone 16, iPhone 17 அறிமுகத்தில் செம்ம டிவிஸ்டு!

"அடேய்.. ஐபோன் 16 சீரீஸ் மாடல்களே இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை, அதற்குள் ஐபோன் 17 சீரீஸ் பற்றி அப்டேட்-ஆ!" என்று உங்களில் சிலர் கடுப்பாகலாம். ஆனால் உண்மை என்னவென்றால்.. ஐபோன் வாங்க விரும்பும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்த ஐபோன் மாடல்களை பற்றி வெளியாகும் அப்டேட்களை உற்று கவனிக்க வேண்டும்!

இப்படி செய்வதன் மூலம்.. அடுத்தடுத்த ஐபோன் மாடல்களில் எவ்வளவு பெரிய மேம்பாடுகள் எதிர்பார்க்கலாம்? என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது? எந்த மாடலை வாங்கலாம்? எப்போது வாங்கலாம்? என்கிற விஷயங்களை - எந்தவொரு எக்ஸ்பெர்ட் மற்றும் ரிவ்யூவர்களின் அறிவுரையும் இல்லாமல் - நீங்களே அறிந்துகொள்ள முடியும்.

Plus மாடல்களுக்கு வேட்டு வச்ச Apple.. இனிமேல் Slim மாடல்!

ஐபோன் 17 சீரீஸ் பற்றி அப்படி என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளது? முதல் மற்றும் முக்கியமான அப்டேட் என்னவென்றால் - ஆப்பிள் நிறுவனம் அதன் பிளஸ் மாடல்களுக்கு முடிவு கட்டப்போவது போல் தெரிகிறது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் அறிமுகத்திற்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் பிளஸ் மாடல்களை அகற்ற திட்டமிட்டுள்ளது.

அதாவது ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடலுக்கு பின்னர் ஐபோன் 17 பிளஸ் (iPhone 17 Plus) மாடல் அறிமுகம் செய்யப்படலாம் போவதற்கு நிறைய வாய்ப்புள்ளது.இதற்கு பதிலாக ஐபோன் 17 ஸ்லிம் (iPhone 17 Slim) மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று பேசப்படுகிறது.

இரண்டாவது அப்டேட் என்னவென்றால்.. ஐபோன் 17 சீரிஸில் ஐபோன் 15 சீரீஸில் நாம் கண்டதை போல மற்றும் ஐபோன் 16 சீரிஸில் நாம் காணப்போவதை போல.. ஐபோன் 17 சீரிஸில் 'ப்ரோ மேக்ஸ்' மாடல் ஆனது சீரிஸின் விலை உயர்ந்த மாடலாக இருக்காது. மாறாக ​​​​ஐபோன் 17 ஸ்லிம் மாடல் தான் சீரிஸின் மிகவும் விலையுயர்ந்த மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெயர் குறிப்பிடுவது போலவே ஐபோன் 17 பிளஸ் மாடலானது தற்போதைய ஐபோன்களை விட "குறிப்பிடத்தக்க வகையில் ஸ்லிம் ஆனதாக " இருக்கும். மேலும் இதில் புதுப்பிக்கப்பட்ட கேமரா செட்டப் போன்ற மேம்பாடுகளையும் நாம் காணலாம். இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரீஸின் ஒருபகுதியாக 2025 இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல், 2017 இல் ஐபோன் எக்ஸ் (iPhone X) அறிமுகம் வழியாக கொண்டுவரப்பட்ட மாற்றங்களை போலவே, ஒரு பெரிய ரீடிசைன் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் எக்ஸ் ஆனது ஃபேஸ் ஐடி (Face ID), ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் கிளாஸ் பேக் (Glass Back) ஆகியவற்றை கொண்டுவந்தது. அதேபோல ஐபோன் 17 ஸ்லிம் ஆனது குறிப்பிடத்தக்க அளவிலான ஸ்லிம் சேஸ் மற்றும் சிறிய டிஸ்பிளே கட்அவுட் ஆகியவற்றை கொண்டுவரலாம்.

ஆப்பிள் நிறுவனமானது அதன் டைனமிக் ஐலேண்ட்-ஐ (Dynamic Island) ஒரு பின்ஹோல் கட்அவுட் (Pinhole cutout) மூலம் ரீப்ளேஸ் செய்யும் என்றும் சில வதந்திகள் கூறுகின்றன. இந்த மாற்றம் ஐபோன் 17 சீரிஸில் அல்ல; இது ஐபோன் 16 சீரிஸிலேயே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மொபைல் பிராண்டுகள் அப்பிளின் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை அப்பட்டமாக காப்பி அடிப்பது கூட இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாக இருக்கலாம்.

வரவிருக்கும் ஐபோன் மாடல்களில் எதிர்பார்க்கப்படும் பிற சாத்தியமான மாற்றங்களை பொறுத்தவரை, ரியர் கேமரா செட்டப் ஆனது "பாரம்பரியமான" மேல்-இடது மூலையில் இருந்து ஐபோனின் பேக் பேனலின் நடுப்பகுதிக்கு கொண்டு வரப்படலாம். டிஸ்பிளே அளவை பொறுத்தவரை, ஸ்டாண்டர்ட் ஐபோன் 6.12 இன்ச்சிற்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆனது 6.69 இன்ச்சிற்கு இடையே குறையக்கூடும்.

தற்போது வரையிலாக புதிய ஸ்லிம் மாடலின் டிஸ்பிளே அளவு குறித்து அந்த விவரங்களும் வெளியாகவில்லை. இருப்பினும் தற்போது வாங்க கிடைக்கும் மிகவம் மெல்லிய ஐபோன் மாடல் என்றால் அது தேர்ட் ஜெனரேஷன் ஐபோன் எஸ்இ (3rd Gen iPhone SE) மாடலே ஆகும். இது 0.29 இன்ச் தடிமனை கொண்டுள்ளது. ஆக ஐபோன் 17 ஸ்லிம் ஆனது இதைவிட மெல்லிய வடிவமைப்பை பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
After iPhone 16 Launch iPhone 17 Slim May Replace Plus Model And Priced More Than Pro Max Model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X