Home
Mobile

சத்தமின்றி Apple பார்த்த வேலை.. iPhone 14, iPhone 14 Plus மீது அபார விலை குறைப்பு.. iPhone 15 வந்த நேரம்!

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிளின் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமானதும் பழைய ஐபோன் மாடல்கள் மீது அதிகாரப்பூர்வமான விலைக்குறைப்புகள் அறிவிக்கப்படும். அப்படியாக புதிய ஐபோன் 15 சீரீஸ் அறிமுகமான வேகத்தில் 2 ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் மீது அபார விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று கலிபோர்னியாவில் நடந்த வாண்டர்லஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களாக ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஆகியவைகளை அறிமுகம் செய்தது.

iPhone 14, iPhone 14 Plus மீது அபார விலை குறைப்பு!

புதிய ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, குபெர்டினோவை தளமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) ஆகிய 2 மாடல்களின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகளையும் சத்தமின்றி குறைத்துள்ளது.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மீது எவ்வளவு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது? இவ்விரு மாடல்கள் என்னென்ன ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் வாங்க கிடைக்கின்றன? அவைகளின் பழைய விலை நிர்ணயம் என்ன? விலைக்குறைப்பிற்கு பின்னாலான புதிய விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

ஐபோன் 14 மாடலின் பழைய விலை மற்றும் புதிய விலை: முன்னதாக ரூ.79,900 க்கு வாங்க கிடைத்த 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.69,900 க்கு வாங்க கிடைக்கும். இதே போல ரூ.89,900 க்கு கிடைத்த 256 ஜிபி மற்றும் ரூ.1,09,900 க்கு வாங்க கிடைத்த 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் முறையே ரூ.79,900 மற்றும் ரூ.99,900 க்கும் வாங்க கிடைக்கும்.

ஐபோன் 14 பிளஸ் மாடலின் பழைய விலை மற்றும் புதிய விலை: முன்னதாக ரூ.89,900 க்கு வாங்க கிடைத்த 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.79,900 க்கு வாங்க கிடைக்கும். இதே போல ரூ.99,900 க்கு கிடைத்த 256 ஜிபி மற்றும் ரூ.1,19,900 க்கு வாங்க கிடைத்த 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 க்கும் வாங்க கிடைக்கும்.

புதிய ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் இந்திய விலை நிர்ணயம் என்ன? 128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ 79,900 க்கும், 256ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.89,900 க்கும் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.1,09,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் வேரியண்ட்டை பொறுத்தவரை, 128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ரூ 89,900 க்கும், 256ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ரூ.99,900 க்கும் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ரூ.1,19,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 பிளஸ் முக்கிய அம்சங்கள்: இவைகள் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளன. இந்த மாடல்கள் மேம்பட்ட பேட்டரி ஆயுளை வழங்குவதாக ஆப்பிள் உறுதியளிக்கிறது. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரண்டுமே 12எம்பி மெயின் கேமரா சென்சாரை கொண்டுள்ளது.

கூடுதலாக, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரண்டிலுமே 12எம்பி அல்ட்ரா-வைட் சென்சாரை பேக் செய்கின்றன. முன்பக்கத்தை பொறுத்தவரை, இரண்டிலுமே 12எம்பி கேமரா உள்ளது; இது ஆட்டோஃபோகஸ் திறனுடன் வருகிறது. மேலும் இவ்விரு மாடல்களுமே ஒரு பில்ட்-இன் ஆக்ஷன் கேமராவை அம்சத்தையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
After iPhone 15 Launch Apple Silently Reduced Price of iPhone 14 iPhone 14 Plus in India New Prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X