மிடில்-கிளாஸ் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட கம்மி பட்ஜெட் Motorola போன்கள்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்கள் கொண்ட போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் மூன்று மோட்டோரோலா போன்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோ ஜி05 (Moto G05) ஸ்மார்ட்போனை விலை ரூ.6,999 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81-அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81-Ultra) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன்.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. 5200mAh பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos),எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி05 போனில் உள்ளன.
டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன். ஃபாரெஸ்ட் கிரீன் மற்றும் பிளம் ரெட் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
மோட்டோரோலா ஜி35 5ஜி (Motorola G35 5G) ஸ்மார்ட்போன் தற்போது ரூ.9,999 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் யுனிசாக் டி760 (Unisoc T760) சிப்செட் உடன் இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) மூலம் இந்த போன் இயங்குகிறது.
6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி35 5ஜி போன் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) மற்றும் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லீஃப் கிரீன் (Leaf Green), குவாவா ரெட் (Guava Red), மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா ஜி35 5ஜி போனில் உள்ளன. 5000mAh பேட்டரி மற்றும் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளன.
மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G) ஸ்மார்ட்போன் தற்போது ரூ.10,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் கொண்டுள்ளது இந்த போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன்.
அதேபோல் 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக மை யுஎக்ஸ் (My UX) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் மோட்டோரோலா ஜி45 5ஜி போன் இயங்குகிறது. பின்பு டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
இந்த மோட்டோரோலா ஜி45 5ஜி போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) கொண்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பி கேமரா, ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








