Home
Mobile

6000mAh பேட்டரி கதை முடிந்தது.. ரூ.20,000-க்கு கீழ் 7000mAh பேட்டரி கொண்ட 5ஜி போன்கள்.. பட்டியல் இதோ..

இந்தியாவில் தற்போது 7000mAh பேட்டரி கொண்ட போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. எனவே தான் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 7000எம்ஏஎச் பேட்டரி கொண்ட 5ஜி போன்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக இது போன்ற போன்கள் இரண்டு நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப் வழங்குகின்றன.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 7000எம்ஏஎச் பேட்டரி கொண்ட போன்கள் உள்ளன. இந்த பதிவில் அந்த போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரூ.20,000-க்கு கீழ் 7000mAh பேட்டரி கொண்ட 5ஜி போன்கள்.. பட்டியல் இதோ..

1 ரியல்மி நார்சோ 90 5ஜி (realme narzo 90 5G) ஸ்மார்ட்போன் ரூ.16,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 Max 6nm) சிப்செட் உடன் ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

6.57-இன்ச் AMOLED டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 50எம்பி செல்பி கேமரா, 7000mAh பேட்டரி, 60W ஃபாஸ்ட் சார்ஜிங், IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் ரியல்மி நார்சோ 90 5ஜி போனில் உள்ளன.

2. ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட், எஸ்ஜிஎஸ் 5-ஸ்டார் மற்றும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, IP69 ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளன.

அதேபோல் 50 எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 7000mAh பேட்டரி, 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging), 6.75 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஓப்போ கே14 5ஜி போனில் உள்ளன.

ரூ.20,000-க்கு கீழ் 7000mAh பேட்டரி கொண்ட 5ஜி போன்கள்.. பட்டியல் இதோ..

3.மோட்டோரோலா ஜி67 பவர் 5ஜி (MOTOROLA g67 power 5G) ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, IP64 ரேட்டிங், 7000எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது.

4.ரெட்மி 15 5ஜி(REDMI 15 5G) ஸ்மார்ட்போன் ரூ.16479 விலையில் வாங்க கிடைக்கிறது. 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 7000எம்ஏஎச் பேட்டரி, ஐபி64 ரேட்டிங், ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட், 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது.

5.ரெட்மி பி4 5ஜி (realme P4 5G) ஸ்மார்ட்போன் ரூ.19,999 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட், 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

6.ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (realme P4x 5G) ஸ்மார்ட்போன் ரூ.17,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 6.72-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட், ஐபி64 ரேட்டிங், 7000எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.20,000-க்கு கீழ் 7000mAh பேட்டரி கொண்ட 5ஜி போன்கள்.. பட்டியல் இதோ..

புதிய வரவு
7.விவோ டி5எக்ஸ் 5ஜி (VIVO T5x 5G) ஸ்மார்ட்போன் ரூ.18,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் வரும் மார்ச் 24-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ சிப்செட் (4nm Octa Core MediaTek Dimensity 7400 Turbo) சிப்செட் மற்றும் 6.76-இன்ச் டிஸ்பிளே இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, IP69+ ரேட்டிங், MIL-STD-810H மிலிட்டரி கிரேட் டியூரபிலிட்டி, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், பாஸ்ட் சார்ஜிங் , 7200எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Affordable 5G Phones in India Under Rs.20000 with 7000mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X