Home
Mobile

ஏசரின் 6 அருமையான ஸ்மார்ட்போன்கள்

By Karthikeyan
ஏசரின் 6 அருமையான ஸ்மார்ட்போன்கள்

சூப்பரான கணினி சாதனங்களைக் களமிறக்கும் ஏசர் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வர்த்தகத்தையும் வலுப்படுத்த தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் 2013ல் 6 புதிய ஸ்மார்ட்போன் மாடல்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய போன்களை ஐரோப்பிய, சீன, தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏசரின் தலைமை மேலாளர் ஜிம் வோங் கூறுகிறார்.

இந்த 6 போன்களில் 1 போன் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும். மற்ற 5 போன்களும் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வரும் என்று தெரிகிறது. மேலும் இந்த போன்களில் க்வல்காமின் டூவல் கோர் சிபியு மற்றும் மீடியாடெக்கின் சிப்செட்டும் இருக்கும் என்று தெரிகிறது.

சமீபத்தில் ஏசர் க்ளவுட் மொபைல் எஸ்500 என்ற ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் களமிறக்கி இருக்கிறது. மேலும் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் ஏசர் ஏற்கனவே மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

தற்போது இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளை வளைத்துப் போட ஏசர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு தனது புதிய போன்களை குயிஸ்டா மற்றும் கம்பல் கம்யூனிகேசன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு அவுட் சோர்ஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X