Home
Mobile

ஆரம்பமே இறங்கி அடித்த Acer.. ரூ.9,990 பட்ஜெட்ல 64எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஏசர் (Acer) நிறுவனம் இந்தியாவில் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் (Acer Super ZX), ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ப்ரோ (Acer Super ZX Pro) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கம்மி விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் அம்சங்கள் (Acer Super ZX Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் புதிய ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 6300 (Dimensity 6300 chipset) சிப்செட் உடன் இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி வரை ரேம் மறற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியும் இந்த போனில் உள்ளது.சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) மற்றும் IP50 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்தது.

ஆரம்பமே இறங்கி அடித்த Acer.. ரூ.9,990 பட்ஜெட்ல 64எம்பி கேமரா..

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ என்பிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. .இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 5000mAh பேட்டரி வசதி ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல ஸ்பீக்கர் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்போனின் எடை 200 கிராம் ஆகும்.

ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ப்ரோ அம்சங்கள் (Acer Super ZX Pro Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் புதிய ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

டைமன்சிட்டி 7400 (Dimensity 7400 chipset) சிப்செட் உடன் இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியும் இந்த போனில் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்தது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா கேமரா + 2எம்பி மேக்ரோ என்பிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி OmniVision OV50Dகேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆரம்பமே இறங்கி அடித்த Acer.. ரூ.9,990 பட்ஜெட்ல 64எம்பி கேமரா..

அதேபோல் 5000mAh பேட்டரி வசதி ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்டடூயல் ஸ்பீக்கர் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் எடை 182 கிராம் ஆகும்.

ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.9,990-ஆக உள்ளது. அதேபோல் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.17,990-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 25-ம் தேதி அமேசான் (Amazon) தளத்தில் இந்த புதிய போன்கள் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acer Super ZX, Super ZX Pro launched in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X