விட்டா வேற சான்ஸ் இல்ல.. வெறும் ரூ.7,649-க்கு 64MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி (Acer Super ZX 5G) ஸ்மார்ட்போனுக்கு ஒரே நேரத்தில் கூப்பன் தள்ளுபடி மற்றும் பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. நம்ப முடியாத பட்ஜெட்டில் சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,500 கூப்பன் தள்ளுபடி போக கிடைக்கிறது. மேலும், ரூ.849 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,649 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதைவிட கம்மி பட்ஜெட்டில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.

இந்த வேரியண்ட்டின் விலை ரூ.8,998ஆக இருக்கிறது. இப்போது, ரூ.250 கூப்பன் தள்ளுபடி மற்றும் ரூ.874 பேங்க் தள்ளுபடி போக ரூ.7,874 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் சோனி சென்சார் கொண்ட மாடலாக இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி மட்டுமே இருக்கிறது. டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி பீச்சர்களும் பட்ஜெட்டைவிட கூடுதலாக இருக்கின்றன.
ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Acer Super ZX 5G Specifications): இந்த ஏசர் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (OctaCore MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.8 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் மற்றும் 388 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இந்த ஏசர் ஸ்மார்ட்போனில் 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. சோனி எல்ஒய்டிஐஏ (Sony LYTIA) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா உள்ளது.
2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் சோனி சென்சார் கிடைக்காது. ஆனால், இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சென்சார் மட்டுமல்லாமல், ஏஐ இமேஜ் என்ஹான்சர் (AI Image Enhancer), ஏஐ ப்யூட்டி மோட் (AI Beauty Mode), ஏஐ பேஸ் டிடெக்சன் (AI Face Detection) போன்ற ஏஐ பீச்சர்களை கொடுக்கிறது.
அதேபோல நைட் பூஸ்ட் (Night Boost) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது. இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.6 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. இந்த பட்ஜெட்டில் கைரோஸ்கோப், கிராவிட்டி மற்றும் ஜியோமேக்னட்டிக் சென்சார்கள் கிடைக்கின்றன.
டைனாமிக் ரேம் மற்றும் ஹைப்பர்என்ஜின் கேமிங் சப்போர்ட் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கிறது. இந்த ஏசர் ஸ்மார்ட்போனில் லூனார் ப்ளூ (Lunar Blue), கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் காஸ்மிக் கிரீன் (Cosmic Green) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








