Home
Mobile

அமேசான் மிரளுது.. வெறும் ரூ.9,999 போதும்.. 64MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

நம்ப முடியாத அடிமட்ட பட்ஜெட்டில் சோனி சென்சார் கொண்ட 64 எம்பி கேமரா மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கும் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி (Acer Super ZX 5G) போனின் விற்பனை இந்தியாவில் தொடங்கிவிட்டது. செக்மெண்ட் ஃபாஸ்டஸ்ட் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ஏசர் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.

லேப்டாப், டேப்லெட் விற்பனையில் பட்டையை கிளப்பிவரும் ஏசர் நிறுவனம், முதல்முறையாக இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை களமிறக்க தொடங்கி இருக்கிறது. ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி மற்றும் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் ப்ரோ 5ஜி மாடல்களை ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இதில் ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி மாடலின் விற்பனை தொடங்கி இருக்கிறது.

அமேசான் மிரளுது.. வெறும் ரூ.9,999 போதும்.. 64MP கேமரா.. எந்த மாடல்?

ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Acer Super ZX 5G Specifications): இந்த ஏசர் போனில் 6.8 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் கேமிங் பிரியர்களுக்கான ஹைப்பர்என்ஜின் (HyperEngine) சப்போர்ட் கிடைக்கிறது.

ஏஐ இமேஜ் என்ஹான்சர் (AI Image Enhancer) மற்றும் நைட் பூஸ்ட் (Night Boost) சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. 64 எம்பி மெயின் கேமராவில் சோனி சென்சார் கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஏசர் போனில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

ரியர் கேமராவானது, சர்க்கிள் டயல் பம்ப் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பேட்டரி மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது. ஸ்லிம் லுக் கொடுக்கும்படி 8.6 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.

அமேசான் மிரளுது.. வெறும் ரூ.9,999 போதும்.. 64MP கேமரா.. எந்த மாடல்?

இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் போனில் பட்ஜெட்டிலும் பக்கா 5ஜி சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, செக்மெண்ட் பாஸ்டஸ்ட் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வருகிறது. 6 ஆக்சிஸ் ஹைப்பர்சென்சிடிவ் கைரோஸ்கோப், ஜியோமேக்னட்டிக், கிராவிட்டி மற்றும் ரேஞ்ச் சென்சார்களை கொடுக்கிறது.

இந்த ஏசர் சூப்பர் இசட்எக்ஸ் 5ஜி போனில் லூனார் ப்ளூ (Lunar Blue), கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் காஸ்மிக் கிரீன் (Cosmic Green) ஆகிய கலர்கள் ஆர்டருக்கு வருகின்றன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மாடலாக இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஆர்டருக்கு கிடைக்கிறது. முதல்முறையாக இந்திய மார்கெட்டில் ஏசர் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதால், பக்காவான பீச்சர்களை அடிமட்ட விலைக்கு கொடுக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acer Super ZX 5G With 64MP Camera 6GB RAM Sale Under Rs 10000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X