Home
Mobile

ஏஸர் வழங்கும் புதிய விண்டோ ஆப்பரேட்டிங் சிஸடம் ஸ்மார்ட்போன்

By Super
ஏஸர் வழங்கும் புதிய விண்டோ ஆப்பரேட்டிங் சிஸடம் ஸ்மார்ட்போன்
ஏஸர் லாப்டாப்கள் பொதுவாகவே இயக்குவதற்கு எளிதாகவும் தனித்துவத்தோடும் இருக்கும். அந்த வரிசையில் ஏஸர் டபுள்யு4 என்ற புதிய போனை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த போனின் சிறப்பம்சம் என்னவென்றால் இது மைக்ரோசாப்டின் ஓஎஸ்ஸையும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன் 7 மேங்கோவையும் கொண்டுள்ளது. அதனால் இதன் செயல்திறன் மிக வேகமாக இருக்கும்.

இந்த போனின் ப்ராஸஸர் 1ஜிஹச்ஸட் க்வல்காம் எம்எஸ்என்-8255 ஸ்நாப்ட்ராகனாகும். இதன் டிஸ்ப்ளே 3.5 இன்ச் ஆகும். இந்த டிஸ்ப்ளே 480 X 800 பிக்ஸல் ரிசலூசனையும் 16எம் வண்ண அடர்த்தியையும் கொண்டுள்ளது. இதன் யூசர் இன்டர்பேஸ் தற்சுழற்சிக்காக அக்ஸிலர்மீட்டர் சென்சாரையும் லைட் சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் தானாகவே நிறுத்துவதற்காக ப்ராக்ஸிமிட்டி சென்சாரும் உள்ளது. இது கேண்டி பார் டிஸைனில் உள்ளது.

ஏஸர் எம்310 8ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. மைக்ரோஎஸ்டி, மைக்ரோஎஸ்டிஹச்சி, டிரான்ஸ்ப்ளாஷ் மற்றும் எஸ்டிஐஒ போன்ற சேமிப்பை அதிகரிக்கக்கூடிய வசதிகளும் உள்ளன. இதன் யூசர் இன்சர்பேஸ் யுஎஸ்பி 2.0 மற்றும் மினி யுஎஸ்பியையும் கொண்டுள்ளது. தகவல் பரிமாற்றத்திற்காக ப்ளூடூத் வி2.1 மற்றும் வைபை 802.11 பி/ஜி/என் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

இதன் கேமரா 2592 X 1944 பிக்ஸல் ரிசலூசன் கொண்ட 5 மெகா பிக்ஸல் கேமராவாகும். இதன்மூலம் துல்லியமான வீடியோ படங்களைப் பிடிக்க முடியும். இந்த கேமராவில் ஆட்டோ போக்கஸ் மற்றும் ஜியோ டேக்கிங் போன்ற வசதிகளும் உள்ளன. ஆனால் வீடியோ காலிங் செய்வதற்கான முகப்பு கேமரா இதில் இல்லை. இந்த கேமராவின் மூலம் 1280X 700 பிக்ஸல் கொண்ட 720பி ஹச்டி வீடியோவை ரிக்கார்ட் செய்ய முடியும். மேலும் இந்த மொபைல் எப்எம் ரேடியோ மற்றும் 35எம்எம் அவுட்புட் ஆடியோ ஜாக்கையும் பெற்றுள்ளது. மேலும் இது இடிஜிஇ தொழில் நுட்பத்துடன் கூடிய ஜிபிஆர்எஸ் கொண்டிருப்பதால் இனணயதளத்தை விரைவாக இயக்க முடியும்.

ஏஸர் எம்310 எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களான எம்பி3, டபுள்யுஎவி, டபுள்யுஎம்எ, எஎசி, எஎசி+, எம்பி4, டபுள்யுஎம்வி போன்றவற்றை இயக்கக்கூடிய ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களைக் கொண்டுள்ளது.

பேஸ்புக், மைஸ்பேஸ், யுடியூப், ஜிடாக் போன்ற ஆன்லைன் அப்ளிகேஷன்களையும் இது சப்போர்ட செய்யும். ஏஸர் எம்310 எம்எஸ் ஆபிஸையும் சப்போர்ட் செய்யும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இது ஒரு சிறந்த போனாக இருக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X