Home
Mobile

ஏசர் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்!

By Super

ஏசர் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்!
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் நல்ல பெயர் வாங்கிய ஏசர் நிறுவனம் இப்பொழுது மொபைல்களிலும் புகுந்து விளையாடுகிறது. மொபைல் உலகத்திலும் சாதிக்க துடித்து கொண்டிருக்கும் ஏசர், அந்த சாதனையை நிறைவேற்ற அலிக்ரோ எம்-310 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அதிக லாபத்தை ஈட்டி கொடுக்கும் ஸ்மார்ட் மொபைலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த அலிக்ரோ எம்-310 ஸ்மார்ட்போன், 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் எம்எஸ்எம்8255 ஸ்னாப்டிராகன் பிராசஸரையும் கொண்டுள்ளது.

இதில், அனைத்துமே உயர்ந்த தொழில் நுட்பங்கள் தான். அலிக்ரோ எம்-310 என்ற 3.6 இஞ்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் திரையை கொண்டது. இதனால் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தையும் வழங்க முடியும்.

5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ள அலிக்ரோ எம்-310 ஸ்மார்ட்போன், 2592 x1944 துல்லியத்தையும் வழங்கும். அதோடு 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதின் மூலம் சிறப்பான வீடியோ காட்சிகளை கண்டு மகிழலாம்.

நெட் வசதி இல்லாத மொபைல்களை யாரும் இப்பொழுதெல்லாம் விரும்புவதே இல்லை. இதில் ஜிபிஆர்எஸ் வசதியுடன் கூடிய எட்ஜ் தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வசதியை பெறவும் இந்த ஸ்மார்ட்மொபைலில் சிரமப்படவே வேண்டாம்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் 3ஜி தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆசை காட்டு தீ போல் பரவி வருகிறது. அந்த ஆசையையும் அலிக்ரோ எம்-310 ஸ்மார்ட்போன் வழங்கும். நிறைய தகவல்களை சேகரிக்க இதில் 8ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி உள்ளது.

6 மணி நேரம் டாக் டைமை கொடுக்கும் 1,300 எம்ஏஎச் ரிமூவபுல் லித்தியம்-அயான் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட அலிக்ரோ எம்-310 ஸ்மார்ட்போன் ரூ.20,000க்கும் அதிகமான விலையில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X