புதிய ஏசர் ஸ்மார்ட்போன்கள்: ஓர் அலசல் ஒப்பீடு

By Super
|

புதிய ஏசர் ஸ்மார்ட்போன்கள்: ஓர் அலசல் ஒப்பீடு
சந்தையில் ஏசர் நிறுவனத்தின் லிக்யூடு வரிசை ஸ்மார்ட்போன்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. அந்த நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய லிக்யூடு மினி இ-310 ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து, தற்போது லிக்யூடு வரிசையில், மார்க்கெட்டில் அனலை பரப்புவதற்கு தனது லிக்யூடு வரிசையில் புதிதாக சி-6 லிக்யூடு எக்ஸ்பிரஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஏசர். இந்த நிலையில், ஏற்கனவே சந்தையில் இருக்கும் லிக்யூடு மினி இ-310 மற்றும் புதிய லிக்யூடு சி-6 எக்ஸ்பிரஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் உள்ள சிறப்பம்சங்களின் ஒப்பீட்டை காணலாம்.

இந்த 2 ஸ்மார்ட்மொபைலுமே டிஎப்டி தொடுதிரை வசதிக்கும், 2,56,000 கலர்களுக்கும் சப்போர்ட் செய்கிறது. சி-6 லிக்விட் எக்ஸ்பிரஸ் ஸ்மார்டபோன் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியை கொடுக்கும். சி-6 லிக்விட் எக்ஸ்பிரஸ் ஸ்மார்ட்போனை ஒப்பிட்டு பார்க்கையில், லிக்விட் மினி இ-310 ஸ்மார்ட்போனின் திரை சற்று குறைவாக இருக்கிறது. ஏனென்றால் லிக்விட் மினி இ-310 ஸ்மார்போனின் திரை 3.2 இஞ்ச் கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 320 x 480 திரை துல்லியத்தை பெற முடியும்.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே மல்டி டச் மற்றும் ஆக்ஸிலரோமீட்டர் சென்சார் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் கேமரா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஸ்மார்டமொபைல்களில் 5 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இதனால் 2592 x 1944 அதிக அளவிலான கேமரா துல்லியத்தை பெறலாம். இந்த கேமராக்கள் ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும்.

ஏசர் மினி இ-310 ஸ்மார்ட்போன் 600 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம்11 பிராசஸர் கியூவல்காம் எம்எஸ்எம்7227-1 சிப்செட் பொருத்தப்படுள்ளது. இந்த ஸ்மார்போனில் கிராஃபிக்ஸ் அட்ரினோ 200 தொழில் நுட்பமும் உள்ளது. ஏசர் லிக்விட் எக்ஸ்பிரஸ் ஸ்மார்போனிலும் 800 ஹெகாஹெர்ட்ஸ் பிராசஸர் உள்ளது.

லிக்விட் மினி இ-310 ஸ்மார்போனில் 512எம்பி மெமரியும், 512எம்பி சிஸ்டம் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளதால் தகவல்களை சேகரிப்பு போன்ற விஷயங்களை பற்றிய எந்தவிதமான கவலைக்கும் இடமில்லை என்று கூறலாம்.

ஆனால் இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் எக்ஸ்டர்னல் மெமரி வசதியை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். பொதுவாக மக்களின் கவலை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பற்றி இருப்பது உண்மைதான். ஏசர் சி-6 லிக்விட் எக்ஸபிரஸ் மற்றும் ஏசர் லிக்விட் மினி இ-310 என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது.

விலையை வைத்து பார்க்கும்போது இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. ஏசர் மினி இ-310 ஸ்மார்ட்போன் ரூ.11,000 விலையிலும், புதிதாக வந்துள்ள ஏசர் சி-6 லிக்யூடு எக்ஸ்பிரஸ் ரூ.20,000 விலையிலும் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X