Just In
- 31 min ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 1 hr ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- News
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- Lifestyle
வீட்டிலேயே சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி தெரியுமா?
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
சர்ச்சைக்குரிய ஆய்வு: ஐபோன் வைத்திருப்பவர்கள் இதை படிக்க வேண்டாம்.!
ஒருவரின் மொபைல் ரிங்க்டோன் எப்படி அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை நமக்கு வழங்கிவிடுமோ, அதேபோல ஒருவரிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது, அவரைப்பற்றிய சில தனிப்பட்ட விடயங்களை நமக்கு அறிவுறுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்களா.? இந்த கேள்விக்கு ஆம் - இல்லை என்று பதில் கூறும் முன்னரே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு வாசியா.? அல்லது ஐபோன் வாசியா என்பதை கூறுங்கள். ஒருவேளை ஐபோன் பிரியராக இருந்தால் இந்த கட்டுரையை படிக்காமல் இருப்பது நல்லது.
மிகவும் சர்ச்சைமிக்க ஆய்வுகளில் ஒன்றான - ஒரு யார் நேர்மையானவர்கள்.? ஆண்ட்ராய்டு வாசிகளா.? அல்லது ஐபோன் வாசிகளா.? என்கிற ஆய்வை பற்றிய கட்டுரைட் இது. சரி சுற்றி வளைக்காமல் - லிங்கன் மற்றும் லான்காஸ்டர் பல்கலைக்கழகங்களின் மூளையின்கீழ், ஐபோன் பயனர்களுக்கும் மற்றும் மற்ற வகை தொலைபேசி பயனர்களுக்கும் இடையே நடந்த - ஆய்வின் முடிவை காண்போம்.

"கௌவரம் அல்லது பந்தா"
ஆய்வாளர்களின் கூற்றின்படி, "ஐபோன் ஒன்றை வைத்திருக்கும் பெண்கள், இளையவர்கள் மற்றும் பெரும்பாலான அனைவருமே அக்கருவியை ஒரு ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட பொருளாக கருதுகிறார்கள் என்பதை கண்டறிந்ததாக கூறுகிறார்கள். அதாவது நம்ம பாஷை யில் கூறவேண்டுமெனில் ஆப்பிள் ஐபோன் ஆனது "கௌவரம் அல்லது பந்தா"விற்காக படுத்தப்படுகின்றது.

நேர்மை குறைபாடுகள்
எனவே ஆயவின் முதல் பகுதியில், ஆப்பிள் பயனர்களின் ஐபோன்கள் ஆனது அவர்களின் வெளிப்புற உணர்வை தவிர்த்து வேறெந்த வெளிப்பாடுகளையும் நிகழ்த்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் ஐபோன் பயனர்களின் "ஆளுமை" சார்ந்த விடயங்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான ஐபோன் பயனர்கள் நேர்மை குறைபாடுகள் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு புட்டுப்புட்டு வைத்துள்ளது
அத்துடன் நிறுத்திக்கொல்லாமல், ஐபோன் வாசிகள் பணிவானவர்களாக இருப்பதில்லை மற்றும் மிகவும் வேகமான மற்றும் அதிகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை நிகழ்த்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு புட்டுப்புட்டு வைத்துள்ளது. இதில் மேலும் சர்ச்சைக்குரிய வடிய என்னவென்றால் ஆண்ட்ராய்டு பயனர்களோடு நிகழ்த்தப்பட்ட ஒப்பீடே ஆகும்.

உணர்ச்சி வெளிப்பாட்டை நிகழ்த்துவதிலும் ஐபோன் வாசிகள் முதலிடம்
ஐபோன் வாசிகளை நேர்மைக்குறைவானர்கள் என்று கூறும் இந்த ஆய்வு, ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் தொலைபேசி பயனர்களுடன்
ஆப்பிள் ஐபோன் பயனர்களை ஒப்பிட்டு இவர்களை விடவும் மிகவும் நேர்மையற்றவர்கள் என்றும் கூறுகிறது. மிகவும் விரைவில் உணர்ச்சி வெளிப்பாட்டை நிகழ்த்துவதிலும் ஐபோன் வாசிகள் முதலிடம் பிடிக்கிறார்கள் (நீங்கள் ஒரு ஐபோன் வாசியாக இருப்பின் இந்நேரம் உங்களின் காதுகளின் வழியாக புகைவருமளவு கோபத்தில் இருப்பீர்கள்).

பல வகையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை
வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் முடிவானது ஆண்ட்ராய்டு பயனருக்கான பல பண்புக்கூறுகளைப்பற்றியும் பேசுகிறது. அவர்கள் பழையவர்களாகவும்,நேர்மையானவர்களாகவும் மற்றும் பல வகையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை மிக்கவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் ஆண்டராய்டு வாசிகள், அவர்களின் தனிப்பட்ட நன்மைக்கான விதிகளை மீறும் அளவும் குறைவாகவே உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

ஆண்ட்ராய்டு பயனர்கள்
இந்த விதி மீறல் விடயத்தில் ஐபோன் பயனர்களும் ஓர் நிலைப்பாட்டை தான் கொண்டுள்ளனர் என்பது ஆப்பிள் பிரியர்களுக்கான ஒரே ஆறுதல். இறுதியாக ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களிடம் இருக்கும் செல்வம் மற்றும் தங்களிடம் இல்லாத சிறப்பான பொருட்கள் பற்றிய கவலைகளை மிகவும் குறைவான அளவிலேயே மேற்கொள்வதாகவும் மறுகையில் இருக்கும் ஆப்பிள் ஐபோன் வாசிகள் இதற்கு முற்றிலும் எதிரானவர்கள்.

சரிக்கு சமமானவர்கள் தான்
அதாவது செல்வம் மற்றும் தங்களிடம் சிறப்பான பொருட்கள் இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவலை கொள்பவர்களாக உள்ளன. பிரிட்டிஷ் உளவியல் சமூகத்தின் உளவியல் பிரிவு ஆண்டு மாநாட்டில் வெளியிடுபட்ட இந்த ஆய்வு வேண்டுமானால் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு வாசிகளை பிரித்து பார்க்கலாம். ஆனால் தொழில்நுட்ப வலைத்தளமான எங்களுக்கு எந்தவொரு பயனருமே சரிக்கு சமமானவர்கள் தான் என்பதை இங்கு அறிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அதற்கு சாட்சி அனைத்து வகையான செய்திகளையும் பாரபட்சமின்றி உங்களுக்கு வழங்கும் தமிழ் கிஸ்பாட் வலைத்தளம் தான்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470