நம்ப வச்சி ஏமாத்திடீங்களே.. OnePlus 12 ஒரிஜினல் இந்திய விலை வெளியானது.. அப்செட் ஆன இந்தியர்கள்?
2024 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் இன்னும் ஒருசில நாட்களில் நடக்கவுள்ளது. இது ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) உடன் இணைந்து ஜனவரி 23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முறையான அறிமுகத்திற்கு முன்னதாக, அமேசான் இந்தியா வலைதளமானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை தற்செயலாக வெளிப்படுத்தி உள்ளது. இருப்பினும் அது உடனடியாக நீக்கப்பட்டது. ஆனால் டிப்ஸ்டர் இஷான் அகர்வால் (@ishanagarwal24) அதை ஸ்கிரீன்ஷாட் ஆக பதிவு செய்துள்ளார்.

டிப்ஸ்டர் இஷான் அகர்வால் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட்டின்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.69,999 ஆகும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஆனது ரூ.65,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது ரூ.70,000 பட்ஜெட்டின்கீழ் வெளியாகும் என்பது போல் தெரிகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் 'ஸ்மூத் பியோண்ட் பிலீஃப்' நிகழ்வில் (Smooth Beyond Belief Event) இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும். முன்னரே குறிப்பிட்டபடி, அதே நாளில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும்.

ஒன்பிளஸ் 12-ன் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) உடன் வரும். இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.82-இன்ச் குவாட் எச்டி பிளஸ் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 8 Gen 3 SoC) பேக் செய்யும்.
கேமராக்களை பொறுத்தவரை, ஹசல்பிளாட் பிராண்டிங் (Hasselblad Branding) ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். அதில் 50எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் - ஓஐஎஸ்), சோனி எல்ஒய்டி-808 சென்சார்) + 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா (ஓஐஎஸ், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம்) + 48எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா (114 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ) இருக்கும். முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா இருக்கும்.

பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான அண்டர் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (Under Display Finger Print Sensor) உடன் வரும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 100W சூப்பர்வூக் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,400எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும். கடைசியாக தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேடிங்கையும் (IP65 Rating) இது கொண்டிருக்கும்.
ஒன்பிளஸ் 12ஆர் அம்சங்கள்: இது 6.78-இன்ச் ஓரியண்டல் அமோஎல்இடி எல்டிபிஓ டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட் (Snapdragon 8 Gen SoC), ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா), 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் இந்திய விலை நிர்ணயம்: அமெரிக்காவில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்பாடி தோராயமாக ரூ.35,000 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.35,000 க்கும் விற்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோன்ற விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








