ஆகாஷ் 4 டேப்லெட் ஜனவரியில் வருகிறது!!!

Written By:

இந்தியாவின் ஐடி மற்றும் தகவல் தொடர்பு துறை மந்திரியான கபில் ஷிபில், ஆகாஷ் 4 டேப்லெட் ஜனவரி மாதம் 2014ல் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். ஆகாஷ் 4க்கான தொழில்நுட்ப அம்சங்களை முடிவு செய்துவிட்டது என அவர் கூறினார்.

இந்திய அரசாங்கம், மக்கள் குறைந்த விலையில் டேப்லெட்டை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் ஆகாஷ் டேப்லெட்டை வெளியிட்டது. ஆகாஷ் டேப்லெட் முன்பதிவு செய்யபட்டு பிறகு வழங்கப்பட்டது.

ஆகாஷ் 4 டேப்லெட் ஜனவரியில் வருகிறது!!!

இப்பொழுது ஆகாஷ் டேப்லெட்டின் அடுத்த வெர்ஸனான ஆகாஷ் 4 டேபலெட்டும் அதே முறையில் வெளியிடப்படும் என தெரிகிறது. 12 நிறுவனங்கள் இதை உற்பத்தி செய்ய தயாராக உள்ளதாக மந்திரி தெரிவித்தார்.

மேலும், ஆகாஷ் 4 டேப்லெட் உற்பத்தி செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இதற்க்கான முன்பதிவு தான் இன்னும் ஆரம்பி்க்கபடவில்லை விரைவில் அது தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

ஆகாஷ் டேப்லெட்டின் லேட்டெஸ்ட் வெர்ஸனான ஆகாஷ் 4 டேபலெட் 4ஜி டெக்னாலஜி, போன் காலிங், 4ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் புளுடூத் கொண்டதாக இருக்கும். ஆகாஷ் டேப்லெட்டின் முந்தைய வெர்ஸன் RS.2,276க்கு வழங்கப்பட்டது. ஆகாஷ் 4ன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்