Home
Mobile

விண்டோஸ் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சாம்சங்?

By Super
விண்டோஸ் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சாம்சங்?
டெல்லி: சர்வதேச அளவில் மொபைல்போன் மார்க்கெட்டில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது. இதனால், மொபைல்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல சர்வதேச நிறுவனங்கள் இந்திய சந்தைக்கென பிரத்யேக மொபைல்போன்களை தயாரித்து அறிமுகப்படுத்தி வருகின்றன.

இதேபோன்று, மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனமும், இந்திய சந்தைக்கென புதிய மாடல்களை தயாரித்து வருகிறது. இதனால், இந்திய சந்தையில் முக்கிய இடத்தை சாம்சங் பெற்றுள்ளது. பொதுவாக சாம்சங் மொபைல்போன்கள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வருவது வழக்கம்.

ஆனால், தற்போது ஆன்ட்ராய்டை விட்டுவிட்டு, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் சாம்சங் மூழ்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த போனை விரைவில் இந்திய சந்தையில் களமிறக்கும் திட்டமும் சாம்சங் வசம் உள்ளதாக தெரிகிறது.

சாம்சங் ஐ937 என்ற குறியீட்டில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த போன் புளூடூத் எஸ்ஐஜி சான்றிதழை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விண்டோஸ் 7 மேங்கோ பிளாட்பார்முடன் ஒத்துப்போகும் வகையிலான புளூடூத் கனெக்ட்டிவிட்டியுடன் இந்த போன் வர இருக்கிறது. மேலும், விண்டோஸ் 7 வீடியோ கேம்ஸ் அம்சங்களும் இருக்குமென தெரிகிறது.

3.6 இஞ்ச் டச் ஸ்கிரீன், 1 ஜிகா ஹெர்ட்ஸ் கொண்ட பிராசஸர் உள்ளிட்டவற்றுடன் ஐ937 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிபியூ மற்றும் குயூவல்காம் ஸ்நாப்டிராகன் சிப் ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும் என கூறப்படுகிறது.

மேலும், எல்இடி ப்ளாஷ் கூடிய 5 மெகாபிக்செல்லுக்கும் கூடுதலான கேமரா, வீடியோ காலிங் வசதிக்காக முகப்பில் விஜிஏ கேமரா மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகிய லேட்டஸ்ட் வசதிகளுடன் சந்தையை ஆக்கிரமிக்கும் வகையில் ஐ937 வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக், ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் அனைத்து ஆடியோ பார்மெட்டுகளுக்கும் ஒத்துப்போகும் வகையில் இந்த போன் வருவதாக சந்தை தகவல்கள் அடித்து கூறுகின்றன.

சாம்சங்கின் கேலக்ஸி-2 அறிமுகத்தின்போது, அந்த நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில்," எங்கள் நிறுவனம் ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் சார்ந்திருக்காது. பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் போன் தயாரிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்," என்று கூறினார்.

சாம்சங் செய்திதொடர்பாளரின் இவ்வாறு கூறியுள்ளதால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போனை அந்த நிறுவனம் தயாரித்து வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளதாக சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், அனைத்து நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்கள் களமிறங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் சிறந்த போனை தேர்வு செய்யும் வசதி கிட்டியுள்ளது சந்தோஷமான சமாச்சாரம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X