A டூ Z.. முரட்டு பீஸ் ஆக அறிமுகமான புதிய Realme ஸ்மார்ட்போன்.. விலை தான் அல்டிமேட்!
16ஜிபி ரேம், 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 1.5கே டிஸ்பிளே, 3டி டெம்பர்டு வேப்பர் சேம்பர் கூலிங் ஏரியா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5500mAh பேட்டரி என.. உச்சி முதல் பாதம் வரை முரட்டுத்தனமான அம்சங்களுடன் ஒரு புதிய ரியல்மி (Realme) ஸ்மாட்போன் அறிமுகமாகி உள்ளது.
நாம் இங்கே பேசுவது ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ (Realme GT Neo 5 SE) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 (Snapdragon 7+ Gen 2) ப்ராசஸர் உடன் வரும் ரியல்மியின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் அதிகபட்சமாக 1டிபி ஸ்டோரேஜை பேக் செய்கிறது.

மேலும் இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5கே ரெசல்யூஷன் உடனான டிஸ்பிளே, 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக 4,500மிமீ சதுர 3டி டெம்பர்டு வேப்பர் சேம்பர் (VC) கூலிங் ஏரியா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ விரிவான அம்சங்கள்: இது 1240 x 2772 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 93.69 பாடி-டு-ஸ்கிரீன் ரேஷியோ, டிசிஐ-பி3 கலர் கேமட்டில் 100 சதவீத கவரேஜ் உடனான 6.74-இன்ச் 1.5கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
புதிய ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 ப்ராசஸர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஜிடி மோட் 4.0 (GT Mode 4.0) எனப்படும் ப்ரீலோலட் அம்சத்துடன் வருகிறது, இது சிபியு (CPU) மற்றும் ஜிபியு (GPU) செயல்திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தீவிரமான கேமிங்கின் போது வெப்பத்தை கட்டுக்குள் வைக்க 4,500மிமீ சதுர 3டி டெம்பர்டு வேப்பர் சேம்பர் (VC) கூலிங் ஏரியாவையும் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ஏஐ-சப்போர்ட் உடனான மேட்ரிக்ஸ் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்கிறது. அதில் எப்/1.79 லென்ஸ் உடனான 64-மெகாபிக்சல் மெயின் கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் எப்/2.2 லென்ஸ் உடனான 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + எப்/3.3 லென்ஸ் உடனான 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 16எம்பிஏ செல்பீ கேமரா உள்ளது.
5ஜி, 4ஜி எல்டிஐ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களுடன் வரும் இந்த ரியல்மி போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் டால்பி அட்மோஸிற்கான ஆதரவும் உள்ளது. கடைசியாக இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5500mAh பேட்டரியை
கொண்டுள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ விலை மற்றும் விற்பனை: இது சீனாவில் மொத்தம் 4 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 8ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 256ஜிடிபி, 12ஜிபி + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி. இவைகள் முறையே (இந்திய மதிப்பின்படி தோராயமாக) ரூ.24,000, ரூ.26,200, ரூ.27,400 மற்றும் ரூ.31,000 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன
ஃபைனல் ஃபேன்டஸி (Final Fantasy) மற்றும் போலார் பிளாக் (Polar Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் ப்ரீஆர்டர்-ஐ தொடங்கியுள்ள ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனானது வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் எப்போது அறிமுகமாகும் என்கிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications