புதிய ஸ்லைடர் மொபைலை தயாரிக்கும் சாம்சங்!

Posted By: Staff
புதிய ஸ்லைடர் மொபைலை தயாரிக்கும் சாம்சங்!
பார்த்து பார்த்து அலுத்துப் போன தோற்றத்தை கொண்டிருந்த மொபைல்கள் மத்தியில், ஸ்லைடர் கொண்ட மொபைல்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது உண்மை தான். எந்த அளவு மக்கள் அன்றாட வாழ்க்கையில் வித்தியாசத்தை விரும்புகின்றனர் என்று இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களின் இந்த மனப்போக்கை கவனித்த சாம்சங் நிறுவனம் ஏராளமான ஸ்லைடர் தோற்றம் கொண்ட மொபைலை கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் தற்போது யூ-380 என்ற புதிய ஸ்லைடர் மொபைலை சாம்சங்  உருவாக்கி இருப்பது பற்றி தகவல்கள் இணையதளங்களில் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. ஸ்லைடர் என்று சொன்னாலே, கியூவர்டி கீப்பேட் வசதி படைத்த மொபைல் என்று தானே அர்த்தம். இதனால்  சுலபமாக டைப் செய்யலாம்.

இது சிடிஎம்ஏ வசதி கொண்ட மொபைல் என்பதால், சிடிஎம்ஏ இவி-டிஓ 850/ 1900 மெகாஹெர்ட்ஸ் பேண்டு நெட்வொர்க்கை சப்போர்ட் செய்கிறது. வெரிசன் நெட்வொர்க் மூலம் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்படலாம் என்பதற்கு அடையாளமாக யூ-380 மொபைல்போன் சார்ஜரில், வி கேஸ்ட் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.

3.5 ஹெட்ஜேக் வசதியை கொடுக்கும் இந்த யூ-380 மொபைலில் இன்டகிரேட்டடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. யூ-380 மொபைல் பற்றி அதிகமான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

யூ-380 மொபைலுக்கும், சாம்சங் டிராய்டு மொபைலுக்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருப்பதாக தெரிகிறது. இந்த மொபைலின் விலை பற்றியும் சரியாக தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் இந்த சாம்சங் யூ-380 மொபைல் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot