வாட்டர் ப்ரூப் தொழில் நுட்பத்துடன் புதிய கேசியோ மொபைல்

அந்த வகையில் இளைய தலைமுறையினரின் நோக்கங்களை சரியாக புரிந்து கொண்டு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஓர் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது கேசியோ நிறுவனம்.
ஜி'சோன் ரேவைன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அற்புதமான மொபைல் நிச்சயம் புதுமை விரும்பிகளால் நேசிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
வாட்டர், டஸ்டு, ஷாக் ப்ரூஃப் போன்ற பாதுகாப்புக் கவசங்களை இந்த மொபைல் உடுத்தியிருக்கிறது என்று கூட சொல்லலாம்.
ஜி'சோன் ரேவைன் 2 மொபைல் 1.8 இஞ்ச் சிறிய திரை கொண்டதாக இருந்தாலும் எதையும் தெளிவாக காட்டுகிறது.
அருமையான கேமரா வசதியையும் கொடுக்கும் இந்த மொபைலில் பொருத்தப்பட்டிருக்கும், 3.2 மெகா பிக்ஸல் கேமரா அழகான புகைப்படங்களை எடுக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.
32ஜிபி வரை ஸ்டோரேஜ் மெமரியை வழங்குகிறது. இதனால் தேவையான தகவல்களை கவலையின்றி சேமித்துக் கொண்டே இருக்கலாம்.
ஜிபிஎஸ் சேட்டிலைட் சிஸ்டம் தொழில் நுட்பத்திற்கு துணை புரியும் இந்த மொபைல் நிறைய அப்ளிக்கேஷன் வசதிகளையும் கொடுக்கும்.
வாடிக்கையாளர்களின் மனதை இந்த மொபைல் நிச்சயம் எளிதில் கவர்ந்துவிடும் வகையில் வடிவமைப்பையும், வசதிகளையும் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications