Home
Mobile

அனைத்து வசதிகளுடன் ஆன்ட்ராய்டு போன்: எல்ஜி ஆயத்தம்

By Super
அனைத்து வசதிகளுடன் ஆன்ட்ராய்டு போன்: எல்ஜி ஆயத்தம்
ஸ்மார்ட்போன் மார்க்கெட் எப்போதும் இல்லாத அளவிற்கு எகிறி வருகிறது. இதனால், பட்ஜெட் போன்கள் மட்டுமின்றி சொகுசு வசதிகள் கொண்ட போன்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னணி நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

மின்னணு சாதன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் எல்ஜி, விரைவில் 5 ஆன்ட்ராய்டு போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவி்ததுள்ளது. அதில், அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட போனும் ஒன்று.

எல்ஜி பிரதா கே-2 என்ற பெயரில் வரும் இந்த போன் அகன்ற 4.3 தொடுதிரை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கெப்பாஸிட்டிவ் டிஸ்பிளே துல்லியமான மற்றும் ஹைடெபினிஷன் வீடியோ மற்றும் படங்களை காட்டும்.

ஆற்றல்வாய்ந்த 8 மெகாபிக்செல் கேமரா இதற்கு வலுசேர்க்கும். 720பி வீடியோ ரெக்கார்டிங் வசதியையும், போதிய வெளிச்சம் இல்லாதபோது கூட இதன் எல்இடி ப்ளாஷ் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

இதில்,டாப்கிளாஸ் மல்டிமீடியா ஆப்ஷன்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளேபேக், ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் மற்றும் எப்எம் ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது.

கனெக்ட்டிவிட்டி வசதிகளிலும் நிறைவை கொடுக்கும். புளூடூத், 3ஜி, வைஃபை, யுஎஸ்பி பிசி சிங்க் உள்ளிட்ட அனைத்து இணைப்பு வசதிகளும் கொண்டதாக இருக்கிறது. இது 16ஜிபி சேமிப்பு திறனை கொண்டிருப்பதால், சேமிப்பு திறனை பற்றிய கவலை இருக்காது.

ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருப்பதால், பயன்பாட்டு வசதிகளில் பின்னி எடுக்கும்.

இந்த போனின் விலை விபரத்தை எல்ஜி இதுவரை வெளியிடவில்லை. ஆனால், உயரிய ஸ்மார்ட்போன் ரகத்தை சேர்ந்த அம்சங்களை கொண்டிருப்பதால், விலையும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X