வாட்ஸ்ஆப் உடன் வேற லெவல் மொபைலாக நோக்கியா 3310 4ஜி மாடல்.!

|

எத்தனை வகைகளில் ஸ்மார்ட்போன்கள் வெளியாகினாலும் சில கருவிகளை நாம் எதைவிடவும் அதிகம் நேசிப்பவர்களாக இருப்போம். அப்படியாக பெரும்பாலான பயனர்களால் விரும்பப்பட்ட மற்றும் விரும்பப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு சாதனம் தான் - நோக்கியா 3310.!

வாட்ஸ்ஆப் உடன் வேற லெவல் மொபைலாக நோக்கியா 3310 4ஜி மாடல்.!

நோக்கியா நிறுவனத்தின் கிளாஸிக் கருவியான நோக்கியா 3310-வை பற்றிய அறிமுகமோ, விளக்கமோ, சிறிது காலத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட நோக்கியா 3310 (2017) மாடல் பற்றிய குறிப்புகளே நம்மில் பலருக்கு தேவையேயில்லை. தேவையானதெல்லாம் நோக்கியா 3310 4ஜி பதிப்பு மட்டும் தான்.!

நோக்கியா 3310 (2017) 3ஜி பதிப்பு

நோக்கியா 3310 (2017) 3ஜி பதிப்பு

ஆம். நோக்கியா கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து நோக்கியா 3310 (2017) 3ஜி பதிப்பையும் அறிமுகம் செய்தது.

மிகச் சிறந்த இணைப்பு

மிகச் சிறந்த இணைப்பு

இந்த முதல் பதிப்பு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பேண்ட்களுடன் மட்டுமே இணைப்புகளை பெறும் என்றாலும் கூட, இந்த 3ஜி பதிப்பு மிகச் சிறந்த இணைப்புகளை வழங்குகிறது. இதனை தொடர்ந்து, எச்எம்டி க்ளோபல் நிறுவனம் மற்றொரு 3310 பதிப்பை வெளியிடவுள்ளது.

4ஜி ஆதரவை அடைக்கிறது.

4ஜி ஆதரவை அடைக்கிறது.

இந்த முறை நோக்கியா 3310 ஆனது 4ஜி ஆதரவை அடைக்கிறது. இந்த விரவமானது, தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான சீன ஒழுங்குமுறை அமைப்பான டிஇஎன்ஏஏ (TENAA) வழியாக காணப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக கூறப்படும் சாதனம் நமக்கெல்லாம் பிடித்த அதே வடிவமைப்புடனே காணப்பட்டுள்ளது.

யன்ஓஎஸ் (YunOS)

யன்ஓஎஸ் (YunOS)

இந்த கருவியில் காணப்படும் ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் இயக்க முறைமை மட்டும் தான். விடெக்கிராஃபி-யின் (VTechgrapgy) அறிக்கைப்படி, நோக்கியா 3310 4ஜி ஆனது யன்ஓஎஸ் (YunOS) கொண்டு இயங்கும். நோக்கியா 3310-ன் 2ஜி மற்றும் 3ஜி பதிப்புகளானது முறையே பியூச்சர்ஓஎஸ் மற்றும் எஸ்30+ கொண்டு இயங்குகிறது.

'ஸ்ட்ரிப்ட்டு டவுன் வெர்ஷன்' வாட்ஸ்ஆப்

'ஸ்ட்ரிப்ட்டு டவுன் வெர்ஷன்' வாட்ஸ்ஆப்

யன்ஓஎஸ் கொண்டு ஆண்ட்ராய்டில் நாம் காணும் சில பயன்பாடுகளை இயக்க முடியும், இது ஏஓஎஸ்பி (AOSP) அடிப்படையிலானது. இதன் விளைவாக நாம் 'ஸ்ட்ரிப்ட்டு டவுன் வெர்ஷன்' வாட்ஸ்ஆப் போன்ற சில பயன்பாடுகளை நோக்கியா 3310 4ஜி பதிப்பில் காணலாம்.

எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்

எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்

நிச்சயமாக இக்கருவி மிகவும் பிரபலமான ஒரு தொலைபேசியாக இருக்க போவதில்லை என்றாலும் கூட நமது பழைய நினைவுகளை மீட்டுத்தரும் ஒரு சாதனமாக இருக்குமென்பதால் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். இக்கருவி 4ஜி உடன் இணைக்கபடுவதால், எதிர்காலத்தில் 3ஜி கேரியர் நெட்வொர்க்குகள் இல்லாமல் போனாலும் கூட எந்த ஆபத்தும் இல்லை.

100 டாலருக்கு கீழ்

100 டாலருக்கு கீழ்

நோக்கியா 3310 4ஜி பதிப்பிற்கான விலை விவரங்களை பற்றிய எந்த வார்த்தையும் இல்லை என்பது ஒருபக்கமிருக்க இதன் 3ஜி பதிப்பானது 60 அமெரிக்க டாலர்கள் என்கிற புள்ளியில் தொடங்கப்பட்டதால், 4ஜி பதிப்பில் ஒரு சிறிய அதிகரிப்பு நிகழுமென எதிர்பார்க்கலாம். அது 100 டாலருக்கு கீழ் இருந்தால், இன்னும் அதிக வீச்சை எட்டும்.

Best Mobiles in India

English summary
A new version of the Nokia 3310 with 4G is on its way. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X