Home
Mobile

மார்க்கெட்டில் அலையை ஏற்படுத்த வரும் சாம்சங் 'வேவ்'!

By Super

மார்க்கெட்டில் அலையை ஏற்படுத்த வரும் சாம்சங் 'வேவ்'!
மொபைல்போன் குறித்துதான் மக்களிடம் நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்து கொண்டே போகிறது என்றால் அது மிகையில்லை. கீழ் தட்டு மக்களில் இருந்து, அனைத்து தரப்பு மக்களின் கைகளிலும் தவறாமல் இருப்பது மொபைல் தான். இதனால் மொபைல் நிறுவனங்களும் சிறந்த தொழில் நுட்பங்களை கொடுப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த பந்தையத்தில் சாம்சங் நிறுவனமும் அதி வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு அடையாளமாக சாம்சங் வேவ் டபிள்யூ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது சாம்சங் நிறுவனம். இது 3.65 இஞ்ச் எல்சிடி திரையை வழங்கும். இந்த அகன்ற திரை 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தை கொடுக்கும்.

இதில், 5 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் உள்ளது. துல்லியமான புகைப்படத்தையும், வீடியோ கேமராவினையும் இந்த கேமராவில் பெறலாம் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. வாடிக்கையாளர்கள் பல நாட்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருந்த படா ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த வேவ் டபிள்யூ ஸ்மார்ட்போனில் கிடைக்கும். 832 மெகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் புதிதாக டால்ஃபின் வெப் பிரவுசர் வசதியுடன் வெளி வர உள்ளது. 1,350 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 20 நாள் ஸ்டான்-பை டைமையும் பெறலாம்.

இந்த சாம்சங் வேவ் டபிள்யூ எம் என்ற ஸ்மார்ட்போன் ரூ.12,000 விலையையொட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X