கம்பீரமாக காட்சி தரும் ஹுவெய் ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
கம்பீரமாக காட்சி தரும் ஹுவெய் ஸ்மார்ட்போன்!
சில நிறுவனங்கள் தனது அடுத்த அடுத்த படைப்புகளில் அதிகம் வித்தியாசம் காட்டி வாடிக்கையாளர்களை வியக்க வைத்து வருகிறது. இப்படி ஆச்சர்யப்படுத்தும் விஷயத்தினை ஹுவெய் வெகு சிறப்பாக செய்து வருகிறது.

அசன்ட் பி-1 எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை வியக்க வைக்கும் விதத்தில் ஹுவெய் உருவாக்கி இருக்கிறது. இந்த புதிய அசன்டு பி-1 ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் கொண்டது.

அசன்டு பி-1 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற அமோல்டு தொடுதிரையில் அசத்தும். இதினால் 540 X  960  பிக்ஸல் திரை துல்லியத்தையும் கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு கேமராக்களை பெற முடியும்.  வாடிக்கையாளர்களின் மனதை தொடும் 8 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ கேமராவும் இதில் உள்ளது. இதன் மூலம் புகைப்படமோ, வீடியோவோ எதுவாக இருப்பினும் தெளிவாகவும், அழகாகவும் எடுக்க முடியும்.

எல்ஐ-அயான் 1,800 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால் 3ஜி மற்றும் 2ஜி தொழில் நுட்பத்தினையும் வெகுவாக பெறலாம். மொபைல் மார்கெட்டில் பல தொழில் நுட்பங்கள் வந்தும் 2ஜி, 3ஜி போன்ற நெட்வொர்க் வசதியின் மேல் உள்ள மோகம் வாடிக்கையாளர்களுக்கு குறையவில்லை தான். அதை புரிந்து தான் இந்த அசன்டு பி-1 ஸ்மார்ட்போனில் சிறந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான விலையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot