Home
Mobile

சீனாவில் அறிமுகமாகி உள்ள மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!

By Super

சீனாவில் அறிமுகமாகி உள்ள மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!
சிறப்பான மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மோட்டோரோலா நிறுவனம் தனது டெஃபி எக்ஸ்டி-535 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. டெஃபி எஸ்டி-535 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

உயர்ந்த தொழில் நுட்பங்களை கொடுப்பதில் சிறந்த இடத்தில் இருக்கும் சீனாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவு வரவேற்பினை பெறும் என்பதையும் பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது. அதற்கு முன் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள தொழில் நுட்ப விவரங்களை பார்ப்போம்.

டெஃபி எக்ஸ்டி-535 ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரை வசதியையும் கொண்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக தகவல்களை பார்க்க முடியும். 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

அழகான புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றை பெற இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாது எக்ஸ்டி-535 ஸ்மார்ட்போன் முகப்பு கேமராவினையும் தரும்.

1ஜிபி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 32 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளும் எக்ஸ்டர்னல் மெமரி சவுகரியமும் இதில் உள்ளது. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்கிங் வசதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் எளிதாக சப்போர்ட் செய்யும்.

பேட்டரி பற்றிய கவலையே இந்த ஸ்மார்ட்போனில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். டெஃபி எக்ஸ்டி-535 ஸ்மார்ட்போன் ஸ்டான்டர்டு லித்தியம் அயான் 1,650 எம்ஏஎச் பேட்டரியினையும் வழங்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த தொழில் நுட்ப விவரங்களை பார்க்கும் போது நிச்சயம் இந்த மோட்டோரோலா டெஃபி எக்ஸ்டி-535

ஸ்மார்ட்போனும் சீனாவில் சிறந்த இடத்தை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளிலும் ஹிட் கொடுக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X