புதிய ஸ்மார்ட்போன் பற்றி ரகசியம் காக்கும் எச்டிசி!

இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் எந்த விதத்திலும் கசியாதவாறு படு ரகசியம் காத்து வருகிறது எச்டிசி. எனவே, எச்டிசியின் புதிய ஸ்மார்ட்போன் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கிட்டதட்ட டிராய்டு இன்கிரிடிபிள்-2 ஸ்மார்ட்போன் போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளதால் இந்த புதிய ஸ்மார்ட்போன் டிராய்டு இன்கிரிடிபிள்-3 என்ற பெயர் கொண்டதாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டதாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்க இருக்கும் இந்த மொபைல் 8 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இதில் அமோல்டு எஸ்-எல்சிடி திரை வசதியை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இது ஆன்ட்ராய்டு 4.0.1 ஐஸ்கிரீம் சான்ட்விச் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இத்தகைய தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications