அடுத்து மார்க்கெட்டில் கால் பதிக்கும் சிஃபோர் மொபைல்கள்

Posted By: Staff

அடுத்து மார்க்கெட்டில் கால் பதிக்கும் சிஃபோர் மொபைல்கள்
சென்னையை சேர்ந்த முனோத் குழுமமும், சீனாவை சேர்ந்த ஜி'ஃபைவ் நிறுவனமும் இணைந்து முனோத் ஜி'ஃபைவ் டெலிகாம் லிமிடெட் நிறுவனம் ஒன்றைத் துவங்கி உள்ளன.

இந்த நிறுவனம் சிஃபோர் பிராண்டில் மொபைல்களையும் மற்றும் டேப்லட்களையும் வெளியிட உள்ளது.

மேலும், சிஃபோர் பிராண்டில் வரும் அனைத்து மொபைல்களும் டச் ஸ்கிரீன் கொண்டதாக இருக்கும் என்பது கூடுதல் விஷேசம்.

மார்க்கெட்டில் டச் ஸ்கிரீன் கொண்ட மொபைல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் சிஃபோர் டச் ஸ்கிரீன் மொபைல்களுக்கும் நிச்சயம் பெரிய இடம் உண்டு என்று கணிக்க முடிகிறது.

இந்த சிஃபோர் மொபைல்கள் ரூ.4,000 விலையில் இருந்து ரூ.14,000 விலை வரையில் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆகவே வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை நம்பகமாக வைத்து டச் ஸ்கிரீன் மொபைல்களை வெளியிடப்போவதாக முனோத் ஜி'ஃபைவின் உயர் அதிகாரியான ஜஸ்வந்த் முனோத் கூறியுள்ளார்.

இந்த முயற்சி நிச்சயம் நம்பகமான வெற்றியைக் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜி'ஃபைவ் நிறுவனத்திற்கு ஏற்கனவே நல்ல நெட்வொர்க்கை பெற்றிருப்பதும் முனோத் ஜிஃபைவ் கூட்டுக் குழுமத்துக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

மாநகரங்கள், சிறு நகரங்கள் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஜிஃபைவ் 550 சர்வீஸ் சென்டர்கள் இருக்கிறது. அதனால் முழுமையாக இந்த முயற்ச்சியில் இறங்கி வெற்றியினை அடையலாம் என்று நம்பப்படுகிறது.

இப்படி சிஃபோர் மூலம் வெளிவர இருக்கும் மொபைல்களுக்கு இம்ரான் கான் அல்லது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பிரபலங்களை விளம்பர தூதராக நியமிக்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால், இது பற்றி ஜஸ்வந்த் முனோத் வாய்திறக்கவில்லை. சிஃபோர் பிராண்டில் புதிய மொபைல்களும், டேப்லட்டுகளும் தீபாவளிக்கும் முன்னதாகவே வெளிவரும் என்று எதிரபார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot