Home
Mobile

மொபைல் ரேசுக்கு இசட்டிஇ ரேஸர்-2 மொபைல் தயார்!

By Super

மொபைல் ரேசுக்கு இசட்டிஇ ரேஸர்-2 மொபைல் தயார்!
ரேசர் என்ற மொபைலை வெளியிட்டு வெற்றி கண்ட இசட்டிஇ நிறுவனம் இப்பொழுது அதே வரிசையில் ரேசர் II என்ற பெயரில் புதிய ஆன்ட்ராய்டு மொபைலை குறைந்த விலையில் வழங்க உள்ளது.

இந்த மொபைல் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட என்ட்ரி லெவல் போன். அதாவது ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட மொபைல்கள் பொதுவாக அதிக விலையில் தான் கிடைக்கும்.

ஆனால் இந்த ரேசர் II ஆன்ட்ராய்டு மொபைலை குறைந்த விலையிலேயே கிடைக்கும்.

இசட்டிஇ ரேசர் II மொபைல் 2.8 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கிறது. அதோடு டிஎப்டி தொழில் நுட்பத்தையும் கொடுக்கிறது.

இந்த மொபைல்போன் ஆன்ட்ராய்டு 2.2 பிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும்.

ரேசர் II மொபைலின் திரை 2,56,000 கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இந்த புதிய மொபைல் மல்டி டச் தொழில் நுட்பத்தையும் வழங்கும்.

இதன் 3 மெகா பிக்ஸல் கேமரா 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தை கொடுத்து அசத்தும்.

இந்த மொபைல் பிராட்காம் பிசிஎம்2157 பிராசஸரை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாது இதன் சிபியூ 500 எம்எச்இசட் வேகத்தினை வழங்கும்.

இதில் 256 எம்பி ரேம் மற்றும் 512 எம்பி ரோம் வசதியினையும் அளிக்கும். 8ஜிபி மைக்ரோஎஸ்டி மெமரி கார்டையும் பயன்படுத்தலாம்.

1,100 எம்ஏஎச் பேட்டரியினால் அதிக ஆற்றலை வழங்குகிறது.

இந்த இசட்டிஇ ரேசர்-2 மொபைல் மலிவு விலையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X