சேட்கைடு மொபைல்... குழந்தைகளின் உற்ற பாதுகாவலன்!

Posted By: Staff
சேட்கைடு மொபைல்... குழந்தைகளின் உற்ற பாதுகாவலன்!
இன்றைய சூழலில் கணவன், மனைவி ஆகிய இருவருமே வேலைக்கு செல்லும் நிலை தான் அதிகம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளை ப்ளே ஸ்கூலில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் குழந்தைகளிடம் பேசவதற்கு எந்த ஒரு வாய்ப்புமே இல்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்பதை கூட தெரிந்த கொள்ள முடிவதில்லை என்ற கவலை பல பெற்றோர்களிடம் இருக்கிறது.

இந்த கவலையை போக்க சுட்டிகளுக்காக ஒரு குட்டி மொபைலை சாட்கைடு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குழைந்தைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இவர்களின் குட்டி விரல்களுக்கு தகுந்த வகையில் மொபைல் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜிபிஎஸ் தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் பயன்படுத்துவதற்கு மிக எளிதான ஒன்றாக இருக்கும்.

ஜிஎஸ்எம் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த சாட்கைடு மொபைலில் டிடிஎஃப்எஃப் (டைம் டூ ஃபர்ஸ்டு ஃபிக்ஸ்) என்ற தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள சிறந்த தொழில் நுட்பத்தின் மூலம் குழந்தைகள் இருக்கும் இடத்தை பெற்றோர்கள் கண்கானித்து கொண்டே இருக்க முடியும். இதற்கு ஜிஎஸ்எம் லொக்கேட்டிங் தொழில் நுட்ப வசதி உதவுகிறது. இப்படி குட்டி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் இந்த சாட்கைடு மொபைல் ரூ.5,000 விலையில் பெறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot