விண்டோஸ் 7 இயங்குதளத்துடன் புதிய சோனி எரிக்ஸன் ஸ்மார்ட்போன்!

By Super
|

விண்டோஸ் 7 இயங்குதளத்துடன் புதிய சோனி எரிக்ஸன் ஸ்மார்ட்போன்!
நிறைய ஸ்மார்ட்போன்கள் குவிந்து கொண்டிருக்கையில், தனக்கென்று தனி முத்திரை பதிக்கும் சோனி நிறுவனம், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை தன் பக்கம் திருப்ப எக்ஸ்பீரியா எக்ஸ்-7 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 4.3 இஞ்ச் திரை டபிள்யூவிஜிஏ டச் ஸ்கிரீன் தொழில் நுட்ப வசதி கொண்டது. எக்ஸ்பீரியா எக்ஸ்-7 மொபைல் விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கும். இந்த ஓஎஸ் தொழில் நுட்பத்தை எளிதாக இயங்க வைக்க 1.2 ஜிகாஹெர்டஸ் வேகம் கொண்ட ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8260 சிபியு பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளதால், 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெற முடியும்.

3ஜி , எட்ஜ் குவாட் பேண்டு, ஜிபிஆர்எஸ் போன்ற தொழில் நுட்பங்களையும் கொண்டுள்ளது. எக்ஸ்பீரியா எக்ஸ்-7 ஸ்மார்ட்போனில் சோஷியல் நெட்வொர்க் வசதியை பெறலாம். ஸ்டீரியோ புளூடூத் வி2.1 வசதியினை உபயோகித்து தகவல்கள் பரிமாற்றம் செய்யலாம்.

இதன் எல்ஐ-அயான் பேட்டரி, பேசுவதற்கு அதிக நேர டாக் டைமை வழங்குகிறது. இந்த புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்-7 ஸ்மார்ட்மொபைல் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவர்ந்து இழுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X