ஏன் OPPO Find X8 Pro அதன் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது: இது பெர்ஃபெக்ட் பிளாக்ஷிப் என்பதற்கான 5 காரணங்கள்!
நீங்கள் பட்ஜெட் விலை விருப்பங்களை தேடினாலும் சரி அல்லது பிளாக்ஷிப் டிவைஸ்களை பார்த்தாலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை கடுமையான போட்டித்தன்மையுடன் உள்ளது. பட்ஜெட்-விலையில் புதிய ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு பல வகையான விருப்பங்கள் உள்ளன, அதேபோல க்ளீன் ஆன பிரீமியம் ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கும் நிறைய விருப்பங்கள் உள்ளன. இருப்பினும் இந்த பிரிவில், ஒரு ஸ்மார்ட்போன் தனித்து நிற்கிறது, சமரசம் செய்யப்படாத அல்ட்ரா-பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. அது OPPO Find X8 Pro ஸ்மார்ட்போனாகும்!
இந்த ஸ்மார்ட்போன் ஒரு பவர்ஹவுஸ் ஆகும். இது தொழில்துறை-முன்னணி கேமரா வன்பொருள், உயர்மட்ட செயல்திறன், விதிவிலக்கான பேட்டரி ஆயுள், மிகவும் வேகமான சார்ஜிங் மற்றும் பிரமிக்க வைக்கும் விஷுவல்ஸ் ஆகியவற்றுடன் பிளாக்ஷிப் பிரிவை மறுவரையறை செய்கிறது. இது பெஸ்ட்-இன்-கிளாஸ் வன்பொருளை க்ளீன் ஆன மென்பொருள் மற்றும் திரும்பி பார்க்க வைக்கும் வடிவமைப்புடன் ஒருங்கிணைக்கிறது. நீங்கள் சிறந்ததை தேடுகிறீர்களானால், OPPO Find X8 Pro ஏன் இந்த பிரிவில் பெஸ்ட் என்பதற்கான 5 காரணங்கள் இதோ:

1. குவாட்ரிபிள் 50எம்பி கேமரா செட்டப் உடன் மொபைல் போட்டோகிராஃபியை மறுவரையறை செய்கிறது!
OPPO Find X8 Pro ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்த்துடன் நாம் ஆரம்பிக்கலாம். இது ஹசல்பிளாட் மாஸ்டர் கேமரா சிஸ்டத்தில் மூன்று அல்ல, நான்கு 50எம்பி கேமராக்கள் உள்ளன. இது ஓஐஎஸ் ஆதரவு உடன் பெரிய 50எம்பி (சோனி எல்ஒய்டி808) ப்ரைமரி சென்சார், ஏஎஃப் உடன் 50எம்பி (சாம்சங் ஐசோசெல் ஜெஎன்5) அல்ட்ராவைட் லென்ஸ், 50எம்பி (சோனி எல்ஒய்டி600) ஓஐஎஸ் உடனான பெரிஸ்கோப் ஷூட்டர் மற்றும் எஃப்/4.3 அபெர்க்ஷர் மற்றும் ஓஐஎஸ் உடனான 50எம்பி (சோனி ஐஎம்எக்ஸ்858) பெரிஸ்கோப் கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

OPPO Find X8 Pro ஸ்மார்ட்போன் ஆனது உங்கள் பாக்கெட்டில் ஒரு தொழில்முறை கேமராவை வைத்திருப்பது போல் உணர வைக்கும். சூரிய அஸ்தமனத்தின் பொன்னிற சாயல்களையோ அல்லது மெழுகுவர்த்தியில் ஒளிரும் இரவு உணவின் மென்மையான பிரகாசத்தையோ.. இப்படி நீங்கள் எதை படம்பிடித்தாலும், இந்த ஸ்மார்ட்போனின் ப்ரைமரி கேமரா ஒவ்வொரு ஷாட்டிலும் நல்ல டீடெய்ல்களை சேர்க்கிறது மற்றும் வண்ணம் நிறைந்ததாக இருப்பதை உறுதிசெய்கிறது. ஒருவேளை நீங்கள் விடுமுறையில் இருந்தால், இதன் டூயல்-பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராக்கள் தொலைதூரத்தில் உள்ள விஷயங்களை பெரிதாக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் - ஒரு மலை உச்சியின் தெளிவான நெருக்கமான காட்சியையோ அல்லது தொலைதூர கிளையில் அமர்ந்திருக்கும் பறவையையோ, தரத்தில் எந்த குறையும் இல்லாமல் படம்பிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள்! Find X8 Pro இன் ஜூம் திறன்களை 0.6x முதல் 120x பார்க்க கீழே உள்ள படத்தைக் கிளிக் செய்யவும்

30எக்ஸ் ஜூமில் கூட, இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்களின் விவரங்கள் அழகாக இருக்கிறது, மேலும் 60எக்ஸ் ஜூமில், நீங்கள் இன்னும் தெளிவான, பயன்படுத்தக்கூடிய படங்களை எடுக்கலாம். ஒரு மைல் தொலைவில் இருந்து படம் பிடிக்க வேண்டுமா? ஏஐ டெலஸ்கோப் ஜூம் 10எக்ஸ் ஆனது 10எக்ஸ் ஜூமிங்கை ஆக்டிவேட் செய்யும். மேலும் 10எக்ஸ் மெக்னிபிஃகேஷனுக்கு அப்பால் ஜூம் செய்யும்போது, மேம்பட்ட ஏஐ உங்கள் காட்சிகளை இன்னும் விரிவாகக் காட்டும்படி கூர்மைப்படுத்துகிறது.
போட்ரைட் புகைப்படங்களுக்கு ஹசெல்பிளாட் மோட் ஒரு கனவு போன்றது. உங்கள் நண்பரை ஒளிரும் ஒரு நகரத்தின் பின்னணியுடன் ஒரு கேண்டிட் ஷாட் எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், இந்த மோட் ஒரு கிரீமி ப்ளர் பேக்கிரவுண்ட் உடன் மிகவும் துல்லியமான மற்றும் அழகான புகைப்படத்தை வழங்குகிறது. இன்னும் அழகான போட்ரைட் புகைப்படங்களை எடுக்க சாப்ட் லைட்டிங் போட்ரைட் அம்சம் நம்மை வியப்படைய செய்கிறது. மூடுபனி போன்ற எபக்ட் உடன் நீங்கள் நேரடியாக இன்ஸ்டாகிராமில் ரெடி டு போஸ்ட் செய்யும் புகைப்படங்களை
இந்த போனில் எடுக்கலாம். இன்னும் சில கேமரா அம்சங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை க்ளிக் செய்யவும்.

இந்த போனில் உள்ள லைவ்போட்டோ அம்சம் ஆக்ஷன் பேக்டு நிகழ்வுகளை மிகவும் துல்லியமான படம் எடுக்கிறது. உதரணமாக, உங்கள் வீட்டு செல்லப்பிராணி ஃபிரிஸ்பீயை காற்றில் பறந்து கவ்வும் காட்சியாக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டு செல்ல குட்டீஸ் ஸ்விமிங்பூளில் குதித்து தண்ணீர் ஸ்பிளாஷ் செய்து விளையாடும் நிகழ்வாக இருந்தாலும் சரி, அதை மிகவும் துல்லியமாக நீங்கள் கைப்பற்ற முடியும். ஜீரோ ஷட்டர் லேக் மற்றும் லைட்னிங் ஸ்னாப் அம்சம் ஒவ்வொரு அசைவையும் மிகவும் துல்லியமாக கிரிஸ்டல் கிளியர் புகைப்படங்களாக எடுக்கிறது. குவிக் பட்டன் உதவியுடன் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் கேப்ச்சர் செய்யலாம்.
இறுதியாக, OPPO Find X8 Pro 4கே 60fps டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங் கேமராவுடன் சிறந்த வீடியோ ஷூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த கேமரா லாஸ்லெஸ் 12x ஜூம் ஆதரவுடன் இன்-சென்சார் கிராப் உடன் 50எம்பி சென்சார் உதவியுடன் 4கே ரெசொலூஷனில் வீடியோவை ரெகார்ட் செய்கிறது. ஒட்டுமொத்தத்தில் OPPO Find X8 Pro ஒரு சிறந்த கேமரா அனுபவத்தை வழங்குகிறது.

2. ஸ்மார்ட்போன் அனுபவத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும் மிக துல்லியமான டீடைல்
OPPO Find X8 Pro சாதனம் ஸ்டன்னிங் ஸ்பேஸ் பிளாக் ஷேட் நிறத்தில் மிகவும் துடிப்பான மற்றும் கண்களை கவரும் தோற்றத்துடன் வருகிறது. மறுபுறம், பேர்ல் வைட் பினிஷ் மிகவும் பிரகாசமான க்ளோவ் உடன் ரிச் விசுவல் டெப்த் தோற்றத்தை வழங்குகிறது. இதன் சக்தி வாய்ந்த கேமரா அம்சத்தை தாண்டி, இதன் ஹார்ட்வேர் சக்தி மற்றும் மெகா சைஸ் பேட்டரி உடன் OPPO Find X8 Pro அடுத்தநிலைக்கு சென்றுள்ளது. இவ்வளவு நுணுக்கங்களை நிறுவனம் மிகவும் ஸ்லிம் ஆன ஸ்லீக் டிஸைனுடன் வழங்குகிறது.
OPPO Find X8 Pro ஸ்மார்ட்போனின் நேர்த்தியான வடிவமைப்பை நிறைவு செய்ய, மெட்டல் பிரேம் உடன் மிகவும் உறுதியான சேசிஸ் கட்டமைப்பை இந்த போன் கொண்டுள்ளது. ஐபி68+ஐபி69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ்க்கு எதிராக இந்த போன் பாதுகாப்பாக செயல்படுகிறது. மேல் இடதுபுறத்தில் உள்ள அலர்ட் ஸ்லைடரைப் பயன்படுத்தி ஒரு நொடியில் சைலன்ட், வைப்ரேட் மற்றும் ரிங் மோட்களுக்கு நீங்கள் எளிமையாக மாறலாம்.

இதுதவிர, Find X8 Pro ஸ்மார்ட்போன் சாதனம் 6.78 இன்ச் அளவு கொண்ட குவாட் கர்வுடு ப்ரோ எக்ஸ்டிஆர் அமோல்ட் டிஸ்பிளேவை வைப்ரன்ட் நிறங்களுடன் வழங்குகிறது. இதன் அல்ட்ரா ஸ்லிம் பேசல் டால்பி விஷன் மாற்றம் எச்டிஆர்10+ ஆதரவுடன் இணைந்து உங்கள் வியூவிங் அனுபவத்தை மிகவும் அசலானதாக காண்பிக்கிறது. பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் விசுவல் அம்சத்தில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், ஒப்போ நிறுவனம் அவர்களை எல்லாம் தாண்டி அதன் Find X8 Pro போனில் 2160Hz PWM டிமிங் ஆதரவுடன் கூடுதல் மைல்கல்லை அடைந்துள்ளது. இது பயனரின் கண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, குறைந்த அசௌகரியத்தை வழங்குகிறது. இந்த டிஸ்பிளே டியுவி ரஹீஇன்லேண்ட் ஐ கம்ஃபோர்ட் 4.0 சான்றிதழ் பெற்றுள்ளது. இது இரவு நேர பயன்பாட்டிற்கு சிறந்ததாக அமைகிறது. OPPO Find X8 Pro டிஸ்பிளேயானது கண் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் போது துடிப்பான காட்சியை வழங்குகிறது. டிஸ்ப்ளே ஸ்பிளாஸ் டச் அம்சத்தை ஆதரிக்கிறது.
3.பல நிறுவனங்களுக்குப் போட்டியை கொடுக்கும் பேட்டரி மற்றும் விரைவான சார்ஜிங் வசதி
OPPO Find X8 Pro ஆனது ஒரு பெரிய 5910எம்ஏஎச் சிலிக்கான்-கார்பன் பேட்டரி கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிலிக்கான்-கார்பன் பேட்டரி தொழில்நுட்பமானது லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகளை விட அதிக ஆற்றல் அடர்த்தியை வழங்குகிறது. மேலும் அதிக திறன், சிறிய உடல் பேட்டரி அளவைக் கொண்டுள்ளது இந்த போன். இந்த Find X8 Pro ஆனது ஒருபோதும் ஈர்க்கத் தவறவில்லை, அதாவது ஒன்றரை நாட்களுக்கு மேல் பேட்டரி ஆயுளை வழங்குகிறது இந்த போன். குறிப்பாக இந்த புதிய ஒப்போ போன் மூலம் 7 மணி நேரத்திற்கும் மேலாக டால்பி விஷன் வீடியோவைப் பதிவுசெய்ய முடியும் மற்றும் ஒரு நாள் முழுவதும் நெட்ஃபிக்ஸ் இல் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

மேலும் இதில் 55 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுவதும் சார்ஜ் செய்யக் கூடிய 80 வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் சார்ஜிங் வசதி வியப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் ஒப்போ 50 வாட்ஸ் ஏர்வூக்டிஎம்-ஐ ஒப்போ மேக் ஆதரவுடன் அறிமுகப்படுத்துகிறது. அதாவது இது காந்த சக்தி ஆதரவை வழங்கும் அதே வேளையில் பெரும்பாலான ஃபிளாக்ஷிப்களில் வயர்டு சார்ஜிங் ஆதரவை விட வேகமானது. பின்பு Find X8 Pro ஆனது ஒரு பெரிய பேட்டரியை உள்ளடக்கியிருப்பதால் 10 வாட்ஸ் ரிசர்வ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது.
4.இந்த மொபைல் செயல்திறனின் புதிய சகாப்தம்
Find X8 Pro ஆனது சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9400 எஸ்ஒசி சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது. இது டிஎஸ்எம்எஸ்-இன் இரண்டாம் தலைமுறை 3என்எம் செயல்முறை மற்றும் புதிய ஏஆர்எம் வி9 கட்டமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக எங்கள் சோதனையில், OPPO Find X8 Pro ஆனது AnTuTu மற்றும் Geekbench 6 ஆகிய இரண்டிலும் இரண்டிலும் போட்டியை தகர்த்தது, அதாவது இன்றுவரை நாங்கள் சோதித்ததில் சிறந்த செயல்திறன் கொண்ட போனாக இது உள்ளது. OPPO Find X8 Pro ஆனது, தேவைப்படும் பணிகளின் போது நீடித்த உயர் செயல்திறனுக்கான மேம்பட்ட கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

அதேபோல் இதில் உள்ள டிரினிட்டி எஞ்சின், டைமென்சிட்டி 9400க்கு உகந்ததாக உள்ளது. மேலும் கேச் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் Find X8 Pro இன் செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுளை மேம்படுத்துகிறது. குறிப்பாக Find X8 Pro மென்மையான மற்றும் நிலையான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. அதுவும் இதில் பப்ஜி, ஃப்ரீ ஃபயர், ஜென்ஷின் இம்பெக்ட் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. Find X8 Pro இன் ஏஐ லிங்க்பூஸ்ட் தொழில்நுட்பம் தடையற்ற மல்டிபிளேயர் கேமிங்கிற்கு நிலையான மற்றும் நம்பகமான நெட்வொர்க் இணைப்பை வழங்குகிறது. இதில் 20 ஆண்டெனாக்கள் கொண்ட 360° சரவுண்ட் ஆண்டெனா உள்ளது.
5. தடையில்லா யூசர் எக்ஸ்பீரியன்ஸ்
OPPO Find X8 Pro ஆனது ஆண்ட்ராய்டு 15 கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாகும், இது கலர்ஓஎஸ் 15 ஊடாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏஐ டூல்பாக்ஸ், சர்க்கிள் டூ சர்ச்ச் மற்றும் டச் டூ ஷேர் போன்ற ஏஐ-பவர்ட் பீச்சர்களுக்கு நன்றிகள். இந்த பவர்புல் காம்பினேஷன் ஆனது தடையற்ற யூசர் எக்ஸ்பீரியன்ஸ்-ஐ வழங்குகிறது. கூடுதலாக, ஏஐ ஃபோட்டோ ரீமாஸ்டர், ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர், ஏஐ அன்பிளர், ஏஐ ரிஃப்ளெக்ஷன் ரிமூவர் மற்றும் ஏஐ ஸ்டுடியோ உள்ளிட்ட ஏஐ-டிரைவன் போட்டோகிராபி டூல்ஸ் ஆனது இமேஜின் தரம் மற்றும் எடிட்டிங் திறன்களை உயர்த்துகிறது.


லூமினஸ் ரெண்டரிங் எஞ்சின் ஆண்ட்ராய்டுடைய விசுவல்களை மாற்றுகிறது, ஹெவி மல்டிடாஸ்கிங்கின் போதும் சில்கி-ஸ்மூத் அனிமேஷன்களை கொடுக்கிறது. இது பிரமிக்கும்படியான 3டி எஃபெக்ட்கள், டைனமிக் பிளர்கள் மற்றும் தடையற்ற டிரான்ஸிஷன் மூலம் யூசர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துகிறது. ஹை-பர்ஃபாமென்ஸூக்கான இந்த வடிவமைப்பு ஆனது பாப்புலர் ஆப்களை சிரமமின்றி இயங்குவதை உறுதி செய்கிறது. நீங்கள் அதை எவ்வளவு த்ரோவ் செய்தாலும், இன்டர்பேஸ்-க்கு பதிலளிக்கக் கூடியதாகவும், விசுவலி எங்கேஜ்ஜாகவும் இது இருக்கும்.
எக்ஸ்பெக்டேஷன்களை மீறும் ஃபிளாக்ஷிப்
போட்டி கொண்ட ஸ்மார்ட்போன் துறையில், தனித்து நிற்பது எளிதானதல்ல, இருப்பினும் OPPO Find X8 Pro அதை எளிதாக நிர்வகித்துள்ளது. ஈர்க்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது, Find X8 Pro அதனுடைய ஆம்பிஷனில் மன்னிக்க கோராதது, போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபியென இரண்டிலும் சிறந்து விளங்கும் கேமரா சிஸ்டத்தை வழங்குகிறது. ஓப்போவின் சமரசம் அற்ற அணுகுமுறையானது Find X8 Pro உடைய ரெக்கார்ட் பிரேக்கிங் பர்ஃபாமென்ஸில் நன்கு டாக்குமென்ட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், Find X8 Pro-இன் எல்லைகளை உண்மையிலேயே சோதிப்பது சாத்தியமில்லாதது. அதன் மேஷிவ் பேட்டரி மற்றும் நம்பமுடியாத ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்கள் இல்லாமல் வேண்டுமானால் அது சாத்தியமாகும்.

Find X8 Pro உடைய சாப்ட்வேர் ஆனது ஏஐ முன்னணியில் இருப்பதால், டிவைஸின் தினசரி இன்டர்ஆக்ஷன்களில் தடையாக ஏதுமில்லை. இறுதியாக, ஓப்போவின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் ஸ்ட்ரைக் ஆனது பியூட்டிக்கும் துணிச்சலுக்கும் இடையே சரியான சமநிலை கொடுக்கிறது. எந்தவித சமரசமுமின்றி இறுதியான முதன்மை அனுபவத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நாட்டின் அனைத்து மூலைகளிலும் டெலிவரிக்கு கிடைக்கக்கூடிய OPPO Find X8 Pro-ஐ தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம் என்பதே எங்களது கருத்து.

இந்தியாவில் OPPO Find X8 Pro விலை
OPPO Find X8 சீரிஸ் விலை 16ஜிபி+ 512ஜிபிக்கு ரூ.99,999ஆகும். நீங்கள் இந்த டிவைஸை முன்பதிவு செய்யலாம் மற்றும் டிசம்பர் 03, 2024 முதல் ஓப்போ ஈ-ஸ்டோர், ஃபிளிப்கார்ட் மற்றும் மெயின்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமும் வாங்குவதற்கு கிடைக்கும். ஓப்போ ஆனது முக்கிய பேங்குகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி Find X8 Pro மீது உடனடி டிஸ்கவுண்ட் ரூ.9,999-ஐ பெறுவதற்கான ஆஃபரை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications