3ஜி தொழில் நுட்பத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
3ஜி தொழில் நுட்பத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!
பல வெற்றி சரித்திரங்களை கண்ட சாம்சங் நிறுவனம் இப்பொழுது ஸ்மார்ட்போனை வரிசைபடுத்தி அனுப்ப துவங்கிவிட்டது. கேலக்ஸி எஸ் சிரீஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடம் சிறந்த பெயரை பெற்றுள்ளது.

இதற்கு இடையில் சாம்சங் டபிள்யூ சிரீஸ் ஸ்மார்ட்போனான ஐ-8150 வாடிக்கையாளர்களிடையே சிறந்த முறையில் வரவேற்பை பெற்று  கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3.7 டபிள்யூவிஜிஏ எல்சிடி திரையை கொண்டுள்ளது.

கேலக்ஸி எஸ் ப்ளஸ் ஸ்மார்ட்போனில் உள்ள அதே கியூவல்காம் எம்எஸ்எம்8255டி சிப்செட் இந்த ஸ்மார்ட்போனிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

இந்த ஓஎஸ் எந்த வித இடையூறும் இல்லாமல் இயங்க 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மொபைலில் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேமரா வசதியும் மிக முக்கியமான ஒன்றாக வாடிக்கையாளர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

அந்த வகையில் இதில் டியூவல் கேமரா வசதி இருக்கிறது என்று கூறலாம். இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ செகன்டரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மெமரி வசதியை பற்றியும் எந்த விதமான கவலையும் பட வேண்டிய அவசியம் இல்லை. இதில் மைக்ரோஎஸ்டி கார்டு உள்ளதால் 32ஜிபி வரை இதன் மெமரியை விரிவுபடுத்தி கொள்ளலாம். ஜிபிஆர்எஸ், வைஃபை போன்ற தொழில் நுட்பங்கள் உள்ளதால் எளிதாக இன்டர்நெட் மற்றும் பிரவுசிங் வசதியை பெற்று பயனடைய முடியும்.

இதில்,3ஜி தொழில் நுட்பம் வசதியும் இருக்கிறது. இந்த  கேலக்ஸி டபிள்யூ ஐ-8150 ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000 இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது போன்ற சிறந்த ஸ்மார்ட்போனின் வருகையால் நிறைய வேலைகளை மக்கள் இன்னும் எளிதாக கையாளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்