5 இஞ்ச் திரையுடன் அசத்தும் எச்டிசி வெலாசிட்டி!

வெலாசிட்டி 4ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த வெலாசிட்டி 4ஜி ஸ்மார்ட்போன் 5 இஞ்ச் கியூஎச்டி திரையை கொண்டது. ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் கோர் பிராசஸரையும் கொண்டது.
பொழுதுபோக்கு அமசங்களை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை கொண்டுள்ளது. இதனால் சிறந்த புகைப்படத்தையும், வீடியோ வசதியினையும் பெறலாம். இனிய தருணங்களை அழகாக க்ளிக் செய்யலாம்.
சிறந்த ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் எச்டிசி வெலாசிட்டி 4ஜி ஸ்மார்ட்போனும் ஒன்றாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அதிகமான தகவல்கள் வெளியாகவில்லை. இன்னும் சில நாட்களில் இந்த போனை பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications