90% வாய்ப்பில்லை ராஜா.. 7500mAh பேட்டரி கொண்ட புதிய OnePlus மினி போன்!
கடந்த 2025 ஆம் ஆண்டு, ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சீனாவில் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து, பின்னர் அதை காம்பாக்ட் பிளாக்ஷிப் ஆக (அதாவது மினி ஸ்மார்ட்போன் ஆக) விளம்பரப்படுத்தி இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) என அறிமுகம் செய்திருந்தது.
இதே "செயல்முறை" 2026 ஆம் ஆண்டிலும் நடக்குமென்று, அதாவது சீனாவில் விரைவில் ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) அறிமுகமாகும் என்றும், பின்னர் அது இந்தியாவிற்கு ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) என்கிற மாடல் பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இது எதுவுமே நடக்காது என்பது போல் தெரிகிறது. டெக் பிளாக்கர் யோகேஷ் பிராரின் எக்ஸ் பதிவின்படி, ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போன் ரத்து செய்யப்படுவதற்கு கிட்டத்தட்ட 90 சதவீத வாய்ப்பு உள்ளது. இதே பிளாக்கர் - இந்த ஸ்மார்ட்போன் சோதனை கட்டத்தில் நுழைந்ததாக முன்பு கூறியிருந்தார், பின்னர் 2026 பிப்ரவரி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியிட்டு இருந்தார், இப்போது 90% வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2160Hz PWM டிம்மிங் ரேட்
- ஆக்வா டச் 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
- எடையில் 185 கிராம்
ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவல்களின்படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் எல்டிபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கு. இது 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஒரு மெட்டல் ஃப்ரேம்-ஐயும் பெறலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN5 டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 7500mAh பேட்டரியும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சரியான தகவலாக இருந்தால், ஒன்பிளஸ் 13டி மாடலில் உள்ள 6,260mAh பேட்டரியுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும். ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 7,300mAh பேட்டரி உள்ளது. அதே நேரத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 7,400mAh பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications








